பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠覆60 கி. வா. ஜ. பேசுகிறார்.

களை இயற்றும் பழக்கம் ஏற்பட்டது. அப்பியாச நிலை கடந்த பிறகு அவர் தஞ்சாவூர் ஸ்ம்ஸ்தானத்தைச் சேர்ந்த சங்கீத வித்துவான்களில் ஒருவரானார்.

ஒரு சமயம் பொப்பிலி ஸம்ஸ்தானத்துச் சங்கீத வித்து வானாகிய கேசவையா என்பவர் தஞ்சாவூருக்கு வந்திருந் தார். அவர் கனமார்க்கத்திலே சிறந்த திறமை வாய்ந்தவர். அவருடைய கச்சேரி தஞ்சை அரசருடைய முன்னிலையில் நடைபெற்றது. அவர் பாடும் பாணியே புதிதாக இருந்தது. அதை அறிந்த அரசரும் மற்ற வித்துவான்களும் பிரமிப்பை அடைந்தனர். சங்கீதத்தின் பலவகைத் துறைகளிலும் வல்ல வித்துவான்கள் தஞ்சை ஸ்ம்ஸ்தானத்தில் அக்காலத்தில் இருந்தனர். சங்கீதத்திற்கு உரிய தாயகமாக அந்த ஸம்ஸ் தானம் விளங்கியது. ஆயினும் அந்த வித்துவான்களுடைய கூட்டத்தில் களமார்க்கம் தெரிந்தவர் ஒருவரும் இல்லை. அரசர் கேசவையாவின் சங்கீதத்தைக் கேட்டு அனுபவிக்கும் போது அதன் இனிமையால் ஒரு பக்கம் சந்தோஷமும் ஒரு பக்கம் துயரமும் உண்டாயின. இந்த அரிய மார்க்கத்திற் சிறந்தவர் யாரும் இங்கே இல்லையே!என்பதே அவருடைய துயரத்திற்குக் காரணம். இப்படியே இருந்து விடுவதா? சங்கீதத் துறைகள் பலவற்றுக்கும் புகழ் வாய்ந்த தம் ஸ்ம்ஸ் தானத்தில் கனமார்க்கம் இல்லையே என்ற குறை நிரம்பு வதற்கு வழியில்லையா? என்று எண்ணினார்.

தம்முடைய ஸம்ஸ்தான வித்துவான்களை அழைத்து, கனமார்க்கத்தை இனிமேல் யாரேனும் அப்பியசித்துத் திறமை பெற முடியுமா?’ என்று கேட்டார். முதியவர்களாக -உள்ளவர்கள் தங்களால் அது முடியாத காரியம் என்று சொல்வி விட்டார்கள். இளைஞர்களாக உள்ளவர்களுக்கோ போதுமான தைரியம் உண்டாகவில்லை. கிருஷ்ணையருக்கு மாத்திரம், "நாம் இதைச் சாதிப்போம்' என்ற நம்பிக்கை இருந்தது. அவர் அரசரைப் பார்த்து, கேசவையாவை எனக்கு இந்த மார்க்கத்தின் போக்கைச் சொல்லிக்