பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணம் கிருஷ்ணையர் 了5座

கொடுக்கச் செய்து இதை அப்பியசிக்க வேண்டிய செளகரி யங்களும் செய்து கொடுத்தால் நான் பிரயத்தனம் செய். கிறேன்" என்று சொன்னார். அவருடைய இளமையையும், வன்மையையும், தைரியத்தையும் கண்டு, அந்த முயற்சியில் வெற்றியுறுவாரென்றே யாவரும் எண்ணினர். அரசர் அப்படியே செய்யலாமென்று கூறினார்.

கேசவையாவிடம் கிருஷ்ணையர் அப்பியாசம் செய்யத் தொடங்கினார். சில நாட்களில் அந்த மார்க்கத்தின் இரகசி யங்களையும் அதன் பல துறைகளில் ஒன்றாகிய சக்கர தானம் பாடும் முறையையும் தெரிந்து கொண்டார். அந்தச் சங்கீதத்திலே தி ற ைம பெற வேண்டுமாயின் பல நாள் அப்பியாசம் செய்ய வேண்டும். தனியான இடத்தில் இருந்து செய்து வந்தால் நலமாக இருக்குமென்பது கிருஷ்ணைய. ருடைய எண்ணம். .

அந்தச் சமயத்தில் கிருஷ்ணையருடைய குடும்பத்திற்கே. நண்பராகிய கபிஸ்தலம் ராமபத்திர மூப்பனாரென்பவர் தஞ்சைக்கு வந்திருந்தார். அவர் கிருஷ்ணையரோடு பேசிக். கொண்டிருக்கையில், அவ்வித்துவான் நாம் கனமார்க்கத்தை அப்பியாசம் செய்யத் தொடங்கி யிருப்பதாகச் சொல்லி விட்டு, தனியான இடமும் தக்க வசதிகளும் இருந்தால் மிக்க விரைவில் இதிலே நல்ல பழக்கம் உண்டாத்தை கொள்ளலாம்” என்றார். கேட்ட ராமபத்திர மூப்பனார், எங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள்; தனியாக இ - ம் அமைத்துத் தருகிறேன். வேறு என்ன வசதிகள் வேண்டுமோ அவைகளைச் செய்து தருகிறேன்’ என்றார். r

"இதை அப்பியாசம் செய்யும்போது மூலாதாரத்தி லிருந்து தொனி வருகிறது. அதனால் உஷ்ணம் அதிக மாகிறது. தொண் ைட காய்த்து விடுகிறது. அடிக்கடி வெண்ணெயை உபயோகித்தால் அநுகூலமாக இருக்குமாம்" என்று கிருஷ்ணையர் சோன்னார்.