பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனம் கிருஷ்ணையர் I65

உயரலாம். ஆனால் என் சந்தோஷம் உயர்வதற்கு நியாய மில்லை. என்னுடன் மனம் கலந்து பழகும் இந்தத் துரை யைப் போல வேறொருவர் இந்த உலகத்தில் எனக்குக் கிடைக்க மாட்டார்கள். நான் பாடும்போது இவர் செய் கின்ற சிரக்கம்பத்திற்கு மற்றவர்கள் கொடுக்கும் ஆயிரக் கணக்கான சம்மானங்கள் ஈடாகா' என்று சொல்லிவிட்டுத் தம் கருத்தை அமைத்து ஒரு செய்யுளும் கூறினார்.

கச்சிரங்கருக்குப் பின் அவர் குமாரராகிய கச்சிக் கல்யாண ரங்கர் என்பவர் உடையார்பாளையம் ஸ்ம்ஸ் தானாதிபதியானார். தம்முடைய தந்தையாருக்குக் கணம் கிருஷ்னையர்பால் இருந்த மதிப்பை அவர் அறிந்தவராத வின் அந்தச் சங்கீத வித்துவானை ஒரு தெய்வம்போலப் பாதுகாத்து வந்தார். -

ஒரு சமயம் ஏதோ ஒரு காரணத்தால் கச்சிக்கல்யாண ரங்கர் கனம் கிருஷ்ணையரிடம் பாராமுகமாக இருக்க நேர்ந் தது. வழக்கம் போல ஸம்ஸ்தானாதிபதியைப் பார்க்கலா மென்று கிருஷ்ணையர் சென்றபோது, ஏதோ வேலையா யிருப்பதாகவும், பின்பு பார்ப்பதாகவும் அவர் சொல்லி அனுப்பினார். இவ்வாறு சொல்வது எந்தக் காலத்திலும் வழக்கம் இல்லை. ஆதலின் கல்யாணரங்கருக்கு ஏதோ மன வேறுபாடு இருக்கு மென்று கிருஷ்ணையர் ஊகித்து அறிந் தனர். அப்பால் மறுநாள் போகும்போது கல்யாணரங்கர் முகம் கொடுக்காமல் எதையோ கவனித்துக்கொண்டிருந் தார். வித்துவானுக்குக் கோபம் வந்துவிட்டது. ஒரு பெண் சொல்வது போல ஒரு கீர்த்தனத்தைச் சுருட்டி ராகத்திலே பாடத் தொடங்கினார். .

பத்துப்பை முத்துப்பை வச்சிரப் பதக்கமும் பைபையாப் பணத்தைக் கொடுத்தவர் போலப் பாடின பாட்டுக்கும் ஆட்டுக்கும் நீரென்னைப் பசப்பின தேபோதும் பலனறி வேன் காணும் என்று பல்லவியை முடித்தார்.

6–II -