பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கி. வா. ஜ. பேசுகிறார்

ஸம்ஸ்தானாதிபதிக்கு அப்போதுதான் தாம் பண்ணியது தவறென்று பட்டது. கிருஷ்ணையர் பெரிய பெரிய ஸம்ஸ் தானங்களிலே சிறந்த நிலையில் விளங்கும் தகுதி வாய்ந் தவர். அவர் உடையார்பாளையத்தில் இருப்பது ஸம்ஸ் தானாதிபதிக்கு அதிருஷ்டம்’ என்ற வார்த்தை தமிழ் நாட்டில் உலவுவதை அறிந்தவர். அதை அவர் அப்போது நினைத்துப் பார்த்தார். உடனே எழுந்து,"ஸ்வாமி, என்னை மன்னிக்க வேண்டும். நான் பண்ணினது பிழை. உங்கள் பெகுமையை உணர்ந்தும் நான் இப்படி இருந்த குற்றத்தை மன்னிக்க வே ண் டு ம். தங்களுடைய கீர்த்தனத்தை மேலே கூறி என்னுடைய குற்றத்தை என்றும் நிலைநிறுத்த வேண்டாம். அதை மறந்து விடுங்கள்’’ என்று வேண்டினார். கனம் கிருஷ்ணையர் புன்னகை பூத்தார். 'நான் கீர்த்த னத்தை முடிக்காமல் விடமாட்டேன்' என்று சொல்லி விட்டுப் பல்லவியை ம று படி யும் மாற்றிப் பாடத் தொடங்கினார்.

பத்துப்பை முத்துப்பை வச்சிரப் பதக்கமும் பரிந்து கொடுத்து மிகச்சுகந் தந்து பின் பஞ்சணை மீதினிற் கொஞ்சி விளையாடி ரஞ்சிதமும் அறிந்த மகராஜனே என்று பல்லவியை ஆரம்பித்து கீர்த்தனையை முடித்தார். முதலில் அமைந்த பல்லவி இகழ்ச்சியாக இருந்தது. அதை இதில் அவர் புகழ்ச்சியாக மாற்றிவிட்டார். -

இப்படி அந்த வித்துவான் பல சந்தர்ப்பங்களிலே பாடின கீர்த்தனங்கள் பல உண்டு. பல நிகழ்ச்சிகளும் உண்டு. அவர் அறுபது பிராயம் வாழ்ந்திருந்தனர். அவரு டைய சரித்திரத்தை மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் விரிவாக எழுதி யிருக்கிறார்கள். அவருடைய கீர்த்தனங்களில் ஏறக்குறைய அறு ப த உருப்படிகள் இப்போது அச்சில் வெளிவந்து உலவுகின்றன. அவற்றில்