பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. வா. ஜ. பேசுகிறார்

மல்லிகை மாலை

மாலை நேரம். ம ன ம் சஞ்சல மடைந்ததென்று. தோட்டத்துக்குள்ளே புகுந்தேன். ஞாபகமெல்லாம் எங். கேயோ இருந்தது. அந்தி மயங்கிக் கையெழுத்து மறையும் தருணம். தோட்டத்துக்குள் புகுந்தபோதே என்னுடைய மனம் எப்படி எப்படியோ அலைந்திருந்தது. மாறி அந்தத் தோட்டத்தைப்பற்றி நினைக்கும்படி ஆ கி வி ட் ட து; கம்மென்று வந்த நறுமணத்தை தான் உணர்ந்தேன்; படர்ந்து சென்றுகொண்டிருந்த மனத்தின் சலனம் மாறி மணத்திலே பதிந்து நிலைபெற்று விட்டது.

மேலே மனம் சும்மா இருக்குமா? அது என்ன மணம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. நிச்சயமாக மல்லி கையின் சுகந்தம் என்று தெரிந்து போய் விட்டது. என்ன ஆச்சரியம்! ஒரு சின்ன மலர். பங்களாக்களிலெல்லாம் தொங்கும் கொடிகளில் இருக்கின்றனவே, அந்த மாதிரி கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் இல்லை; தாமரைப் பூவைப்போன்ற பெரிய உருவமும் இல்லை. சுத்த வெள்ளை நிறம்; சிறிய உருவம். இதற்குள்ளே எவ்வளவு நறுமணம்! மனசைக் கவரும் மணம் மனசின் ஒட்டத்தை நிறுத்தும். மணம்! அதுதான் மல்லிகையின் பெருமை.

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலே தமிழில் எவ்வளவோ கவிதைகள் இருந்தன. கவிதையே