பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கி. வா. ஜ. பேசுகிறார்

பத்துப் பாட்டு வெளியானது முதல் தமிழ் நாட்டில் சங்கத் தமிழாராய்ச்சி அரும்பியது. அதனால் தமிழர்க ளிடையே ஒரு குதுரகலமும் கிளர்ச்சியும் எழுந்தன. தொடர்ந்து சிலப்பதிகாரம், மணிமேகலை எ ன் னு ம் காவியங்களும் புறநானூறும் இவருடைய பதிப்புக்களாக வெளிவந்தன. சங்க நூல்களோடு பழங் காவியங்களையும் புராணங்களையும் பிரபந்தங்களையும் சிறந்த முறையில் இவர் பதிப்பித்துத் தந்தார். தமிழ் இலக்கியம் விரிவுற்றது. தமிழர் சரித்திரம் பழையது, சிறந்தது என்ற உணர்வு உண்டாகிவிட்டது.

எட்டுத்தொகையுள் ஐந்து நூல்களை இவர் வெளியிட் டார். ஐம்பெருங் காப்பியங்களென்று வழங்கும் ஐந்து புஸ்த கங்களுள் நமக்குக் கிடைப்பன மூன்றே சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணியென்ற அவற்றை இப்பெரியாரே வெளியிட்டார். அவற்றுள் ஒன்றும் பெளத்த மதக் கொள் கைகளைத் தெரிவிப்பதுமாகிய மணிமேகலைக்கு இவரே. உரை எழுதியிருக்கிறார். மிகவும் அருமையான கதையமைப் பையும், பல அரிய செய்திகளையும் தன்பாற் கொண்ட பெருங் கதை என்ற அழகிய காவியம் இப்பெரியாருடைய பேருழைப்பினாலேயே, அழிந்து போகாமல் உயிர் பெற்றது. இவர் பதிப்பித்த புராணங்களிற் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் இயற்றிய புராணங்களிற் சிலவற்றைக் குறிப்புரை யுடன் பதிப்பித்ததோடு அவருடைய பிரபந்தங்களெல்லா வற்றையும் திரட்டி ஒரு பெரு நூலாகத் தந்திருக்கிறார். பரணி, கோவை உலா, தூது, அந்தாதி முதலிய பிரபந்த வகைகளிற் பலவற்றையும் சில இலக்கண நூல்களையும். தமிழ்நாடு இவருடைய தொண்டின் பயனாகப் பெற்றது.

ஏட்டுச்சுவடிகளாக இருந்த நூல்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பிக்கும் கலையில் இவர் நிகரற்று விளங் கினார். தமிழ்நாடு முழுவதும் பிரயாணம் செய்து தமக்கு உண்டாகும் சிரமத்தையும் அவமதிப்பையும் பொருட்செல.