பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

建75 கி. வா. ஜ. பேசுகிறார்

அளிடத்திலே பாடம் கேட்டவர்கள். அக்காலத்தில் அச்சுப் புஸ்தகங்கள் அதிகமாக வெளி வரவில்லை. ஆதலால் சுவடி களை வைத்துக்கொண்டு படிப்பதே பெரும்பாலோரின் வழக்கமாக இருந்து வந்தது. ஐயரவர்களும் இளமையில் ஏட்டுச்சுவடிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள். ஏட்டில் எழுதுவதையும் பழகினார்கள். மிக வேகமாக எழுது வதில் அவர்கள் வல்லவர்கள். தம்முடைய ஆசிரியராகிய பிள்ளையவர்கள் புதிய நூலை இயற்றிச் சொல்லி வரும் போது ஐயரவர்கள் அதனை ஏட்டில் எழுதி வந்தார்கள்.

எந்த நூலானாலும் பல ஏடுகளை வைத்துச் சோதிக் தும் பழக்கம் அவர்கள் மாணாக்கராக இருந்த காலத்தி லேயே ஏற்பட்டது. ஏதேனும் அச்சுப் புஸ்தகம் கிடைத்தால் ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு புஸ்தகத்திலுள்ள பிழை களைத் திருத்திக் கொள்வதோடு நல்ல பாடங்கள் இருந் தால் அவற்றையும் குறித்துக் கொண்டார்கள். அக்காலத் தில் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு புஸ்தகமாக வெளி பிட்டிருந்த கம்பராமாயணம் அவர்களுக்குக் கிடைத்தது. பிள்ளையவர்களிடத்தில் இராமாயண பாடம் கேட்டார் கள். திருவாவடுதுறை மடத்தில் இருந்த ஏட்டுப் பிரதி களோடும், பிள்ளையவர்களிடத்தில் இருந்த ஒலைச் சுவடி யோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தங்களைக் குறித்துக் கொண்டார்கள். அவ்வாறு ஒப்பு நோக்கியதில் விளங்காமல் இருந்த பல அழகிய பாட பேதங்கள் கிடைத்தன. -

2

பிள்ளையவர்கள் காலமான பிறகு ஐயரவர்கள் இருவா வடுதுறையாதீனத்தில் வித்துவானாக இருந்து தம்பிரான் களுக்கும் பிறருக்கும் பாடம் சொல்வி வந்தார்கள். ஆயினும் ஆதீன வித்துவான் என்று சொல்லிக்கொள்வதோ, எழுது வதோ அவர்களுக்கு வழக்கம் இல்லை. பிள்ளையவர்களும்