பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 . கி. வா. ஜ. பேசுகிறார்

உள்ளவர்கள் மிக்க சுவாரஸ்யத்தோடு இந்த விவாதத்தைக் கவனிக்கலாயினர். .

ஐயங்கார் பக்கம் சிறிது மேலிவடையலாயிற்று. அவ. ருக்கு வாதம் செய்யப் போதிய சரக்கு இல்லை. ஆகையால் தம்முடைய குரலை உயர்த்திச் சப்தம் போட்டுப் பேச ஆரம் இத்தார். தயத்தக்க நாகரிகம் அறிந்த சுப்பிரமணிய தேசிகர் இதை உணர்ந்தார். மெல்ல இடையிலே பேச்சுக் கொடுத்து விஷயத்தை வேறு வழியிலே திருப்பிவிட்டார். ஜயங்காரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லத் தொடங்கி, இவர்கள் தமிழில் நல்ல பா எண் டி. த் தி ய ம் உடையவர்கள். கம்ப ராமாயணத்தில் நல்ல பழக்கம் உண்டு. இங்கிலிஷ-கம் தெரிந்தவர்கள்” என்று பாராட்டினார்கள்.

அதைக் கேட்டு அங்கே அமர்ந்திருந்த ஐயரவர்கள், 'கம்பராமாயணத்தில் இவர்களிடம் சந்தேகம் கேட்க லாமோ? என்று தேசிகரைக் கேட்டார்கள்.

நன்றாகக் கேட்கலாமே!’ என்று அவர் சொல்லவே. ஐயரவர்கள் ஐயங்கார் ஸ்வாமியீடம் சந்தேகம் கேட்கத் தொடங்கினார்கள்; ஒரு பாட்டைச் சொல்லி அதற்குத் தெளிவான அர்த்தம் வேண்டுமென்று சொன்னார்கள்.

அந்தப் பாட்டு அயோத்தியா காண்டத்தில் மந்திரப் படலத்தில் உள்ளது; தசரதனுடைய அமைச்சர்களின் இயல்பைப் புலப்படுத்துவது. அச்சிட்டிருந்த கம்பராமா யணத்தில் அந்தப் பாட்டு தவறான பாடத்துடன் காணப் பட்டது. அதை ஐயரவர்கள் படித்தபோது பொருள் விளங் காமல் தடுமாறினார்கள். பிறகு ஏட்டுச் சுவடியை வைத்து ஆராய்ந்த போது ஒரே ஒர் எழுத்து வித்தியாசமாக இருந் தது. ஆனால் அந்த ஒரெழுத்தினது வித்தியாசத்தாலே பாட்டின் பொருள் பளிச்சென்று விளங்கிவிட்டது. - - ஐயங்காரிடம் ஐயரவர்கள் அச்சிலே கண்ட உருவத்தில் பாட்டைச் சொன்னார்கள். பாட்டு வருமாறு: -