பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே எழுத்து 18 {

அறுபதி னாயிரர் என்னும் ஆண்டகைக்கு உறுதியில் ஒன்றிவர்க் குனர்வென் றுன்னலாம் பெறலருஞ் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் மறிதிரைக் கடலென வந்து சுற்றினார். தசரதனுக்கு அறுபதினாயிரம் பேர் மந்திரிமார்கள். அ வ ரீ க ள் பெறுவதற்கரிய மு ன் யோசனையையும் ஆலோசனை செய்யும் திறமையையும் திருமகள் அருளையும் உடையவர்கள். சமுத்திரமே பல அலைகளுடன் வந்தாற். போல வந்து தசரதன்ைச் சூழ்ந்து கொண்டார்களாம்.

பாட்டில் முதல் இரண்டடி விளக்கமாக இல்லை; பழைய அச்சுப் புஸ்தகப் பாடம் தெளிவாக இல்லை. முதல் அடி சுத்தமாக விளங்கவில்லை. அறுபதினாயிரர் என்னும் ஆண்டகைக்கு-என்பதில் வார்த்தை ஒன்றும் கடினமாக இல்லை. ஆ ன ல் வார்த்தைகள் ஒன்றோடொன்று இசைந்து பொருத்தமான போருள் ஒன்றைத் தரவேண்டும்! அதுதான் இல்லை.

இந்தப் பாட்டின் முதல் இரண்டடிக்குப் பொருள் விளங்கவில்லை. கிருபை செய்து தெரிவிக்க வேண்டும்' என்று ஐயரவர்கள் கேட்டார்கள். அவர்கள் ரட்டுச் சுவடியில் கண்ட பாடம் பொருட் சிறப்பும் திருத்தமும் உடையதாக இருந்தாலும், அச்சுப் புஸ்தகத்தில் இருந்த பாடத்திற்கு ஏதாவது பொருத்தமான பொருள் இருக்கலாமோ என்று ஐயுற்றார்கள். கம்பராமாயணத்தில் வல்லவரென்று அந்த வைஷ்ணவ வித்துவானைப்பற்றித் தேசிகர் சொல்லவே, அ வரி டம் இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்றே கேட்டார்கள். - .

ஆனால் ஐயரவர்கள் கேட்ட கேள்வி அந்த வித்து ஆானைச் சிந்தனையில் ஆழ்த்தியது. பாட்டுக்குச் சரியான படி பொருள் செய்ய மார்க்கமில்லாமல் தவறான பாடம்

கி-12 -