பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே எழுத்து 18 Ꮡ

இந்தப் பாடமே தன்றாக இருக்கிறது. ஆனாலும் அச்சில் உள்ள பாடத்துக்கும் ஏதாவது நல்ல பொருள் உண்டோ என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்’ என்று விதயத் தோடு ஐயரவர்கள் விடை கூறினார்கள்.

எல்லாவற்றையும் வியப்போடு கவனித்துக் கொண்டி ருந்தவரும் ஐயங்காரோடு வாதம் செய்தவருமாகிய சாஸ்திரிகள் ஐயரவர்களைப் பார்த்து, "இந்தப் பாட்டு எந்தக் கிரந்தத்தில் உள்ளது?’ என்று கேட்டார்.

"கம்ப ராமாயணத்தில் உள்ளது." "அதில் இதைப்போல எத்தனை பாடல்கள் உண்டு' "பதினாயிரம் பாடல்கள் இருக்கின்றன.' "அப்படியா! இந்த மாதிரி முரட்டுப் பேர்வழிகள் பதி னாயிரம் பேரை அந்தக் கிரந்தத்தைக் கொண்டு அடக்கி விடலாம் போலிருக்கிறதே!' என்று சொல்லிச் சிரித்தார் சாஸ்திரிகள். மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

3

அந்தப் பாட்டின் முதல் அடியில் அறுபதினாயிரர் என்னும் என்ற பாட்டு ரட்டுச் சுவடியின் உதவியால் 'அறுபதினாயிரர் எனினும் என்று திருந்தியது. ன் என்ற எழுத்து னி என்று மாறியதால் பாட்டின் பொருளிலே புகுந்திருந்த இருள் விலகியது, 'அறுபதினாயிரர் என்று சொல்லும் தசரதனுக்கு’ என்று அர்த்தம் பண்ணினால் பொருத்தமாக இல்லை. அறுபதினாயிரம் பேர் ஆனாலும் எண்ணத்தால் ஒருவர் என்று சொன்னால் எவ்வளவு: பொருத்தமாக இருக்கிறது! ஒரு குடும்பத்தில் ஒருவர் போன வழி மற்றவர் போகாமல் எவ்வளவு சங்கடங்கள் விளை கின்றன. தாட்டிலே ஆயிரம் கட்சிகள் முண்டு பொது நலத்திற்கு எவ்வாறு கேடுகுழ்கின்றனவென்பதை இன்றைய உலகம் நன்கு அறியும். இத்தகைய உலகத்தில் ஒர் அரச