பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கி. வா. ஜ. பேசுகிறார்

இனிமேல் எத்தகைய நூல்கள் வேண்டும்? தமிழ்த். தாத்தாவின் அபிப்பிராயம் வருமாறு:

'பிற்காலத்து நூல்களில் வரவர உயர்வு நவிற்சியும், ஸ்வபாவ விரோதமாகிய வருணனைகளும், அளவுக்கு மேற். பட்ட சிருங்காரமும், விரோத உணர்ச்சியை உண்டாக்கும் மதவிஷயங்களும் புகுந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளை வித்தன. இனி நூல் செய்யப் புகுவார் அவற்றை இலக்கிய இன்பத்துக்காகப் பாதுகாத்துக் கற்றல் வேண்டும். புதிய, இலக்கியங்கள் இயற்றுவதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றன. பல பாஷைகளிலுள்ள விஷயங்களை அறிவ. தனால் இத்துறைகள் இன்னும் விரிவடையும். நாளடைவில் மனிதர்களுடைய வாழ்க்கை நிலை மாறுபடுகின்றது; அக் கொள்கைகளுக்கு ஏற்றபடி இலக்கியங்களும் நல்வழியில் மாற வேண்டியது இயல்பே.'

எல்லோரும் பிரசங்கத்தை மிகவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் காந்தியடி கள் பேசினார். 'சாமிநாத ஐயரவர்களைப் பார்க்கும் போதும் அவர் பிரசங்கத்தைக் கேட்கும்போதும் அவர் காலடியின் கீழ் இருந்து தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது' என்று அவர் சொன்னபோது சிலருக்குத் துரக்கிவாரிப் போட்டது. இது உபசாரத்துக்காகச் சொன்ன வார்த்தையா, என்ன உண்மையே உருவமாக இருக்கும். அப்பெரியார் தமிழ்த் தாத்தாவின் தோற்றத்திலும் பேச்சி அலுள்ள கருத்திலும் ஆழ்ந்து மனப்பூர்வமாகத்தான் இந்த உரைகளை வெளியிட்டார். மகாமகோபாத்தியாயராகிய தமிழ்த் தாத்தா உண்மையும் ஆசிரியர்களுக்கெல்லாம். ஆசிரியராக இருக்கும் தகுதியுடையவரென்பதைச் சத்திய, சோதனை செய்த மகாத்மா உணர்ந்துதான் சொன்னார்

இவ்வாறு சத்திய சோதனை செய்த இரண்டு தாத்தாக் களும் சந்தித்தார்கள்; பேசினார்கள். - -