பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கி. வா. ஜ. பேசுகிறார்

கிறார்கள். 'இது இன்ன காலம்' என்று ஆராய்ச்சிக்காரர். கள் திர்ணயிப்பதற்கு அத்தகைய செய்திகள் அடையாளங். களாக நிற்கின்றன.

ஒரு தனி மனிதர் ஒரு குறிப்பிட்ட இட்த்தில் ஒரு குறிப் பிட்ட காலத்தில் கண்ட காட்சியே இலக்கியத்தின் போக்கிலே தனது சுவட்டைப் பதித்து விடுகிறதென்றால், பல மனிதர்களும் பல நாடுகளும் சம்பந்தப்பட்ட பேரால், பல மாதங்கள் நடைபெறும் சண்டையால் இலக்கியங்களிலே, உண்டாகும் வேறுபாடுகளுக்கு அளவேது?

ஒளவையாரைத்தான் உங்களுக்குத் தெரியுமே? அவர் ஆதிகமான் என்ற சேர அரசனிடமிருந்து பலவகை உப காரங்களைப் பெற்றவர். அவன்மேல் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அந்த அதிகமானுக்குப் பல காலங் கழித்து ஒரு பிள்ளை பிறந்தது. தவம் செய்து பெற்ற பிள்ளை. பிள்ளை பிறந்த சிறப்பைப் பாராட்ட எண்ணினார் ஒளவையார். சமாதான காலமாக இருந்தால் குழந்தைக்காக அவன் தவம் செய்ததையும், அந்தக் குழந்தை உதயமானதை யும் பாடியிருப்பார். அது போர் நடந்துகொண்டிருந்த காலம். அதிகமான் பகைவர்களைப் பெரும்பாலும் தோல்வி யுறச் செய்தான். குழந்தை பிறந்தால் அதை வந்து பார்க்க வேண்டியது தந்தையின் கடமை. வந்து பார்த்தான். அந்தக் காட்சியை ஒளவையார் வருணிக்கிறார்.

அவன் எப்படி வந்து பார்த்தான் தெரியுமா? கையிலே வேல், காவிலே வீரகண்டை, உடம்பிலே வேர்வை, மேலே: புண். கண்ணைப் பார்த்தால் ஒரே சிவப்பு. . . :அட! இன்னும் இவனுக்குக் கோபம் ஆறவில்லையே! சரி, சரி, இவனுடைய பகைவர்களுக்கு அதோகதி தான். இந்தத் தவ மகனைப் பார்த்துங்கூட இவன் கண்களில் ஒவப்புப் போகவில்லையே' -