பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கி. வா. ஜ. பேசுகிறார்

எத்தனையோ வகைகளில் பின்னடைந்தும் இருக்கிறது, எவ்வளவோ நல்ல காரியங்களை நாம் மறந்து விட்டோம். ஆனாலும் நம் முன்னோர்கள் கனவிலும் கண்டறியாத அற்புதங்களைச் செய்கிறோம்.

புத்தக உலகத்தில் முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பு இருந்த நிலை என்ன? இன்று, இந்த 1998-ஆம் வருஷத்தில் இருக்கும் நிலை என்ன? சந்தேகமே இல்லாமல் பல பல வகைகளில் முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். புஸ்தகத்தில் உள்ள விஷயம். அந்த விஷயத்தைச் சொல்லும் தோரணை, புஸ்தகத்தின் உருவ அமைப்பு ஆகிய எல்லாவற். றிலும் கவர்ச்சியும் அழகும் பயனும் அதிகமாகும்படியான முறைகளை நாம் இப்போது மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்ப் புத்தகங்கள் அந்தக் காலத்தில் எப்படி இருந்தன, இப்போது எப்படி இருக்கின்றன, பாருங்கள். முதலில் எண் ணிைக்கையைப் பார்த்தாலே போதும். முன் காலத்தில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவரவே இல்லை. வெளியான புத்தகங்களில் அநேகம் செய்யுள் நூல்கள்; புராணங்களும் பிரபந்தங்களுமாகவே இருக்கும்.

அந்தக் காலத்தில் செய்யுளிலே ஒரு மோகம் இருந்தது. எதுகை, மோனை இருந்துவிட்டால் போதும். செய்யுளாகி விடும். கவிதைச் சுவை இருக்க வேண்டும் என்பதில் அவ்வள வாக அக்கறை கொள்வதில்லை. எதுகை மோனைகளுக்கு எந்த எந்த வார்த்தைகள் இணைந்து வருகின்றனவோ அவற்றைப் போட வேண்டியது, அதைச் செய் புளென்று: சொல்லிப் பாராட்ட வேண்டியது-இப்படிக் கவியை உற். பத்தி செய்தார்கள். 'சீர்பூத்த, வார்பூத்த, நார்பூத்த' என்று தக்கைகளைப் போன்ற வார்த்தைகளை அடுக்கினார். கள். கவிதை என்பது இயல்பாக மலர் மலர்வதைப் போலக் கவிஞன் உணர்ச்சி வசப்பட்டபோது அழகிய உருவத்தோடு வெளிப்படுவதென்று இந்த எதுகை மோனைக் கவிஞர்கள் நினைக்கவில்லை. தொழிற்சாலையில் பாண்டங்களோ,