பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலம் வேறு £3.

வேறு பண்டங்களோ அச்சில் வார்த்து ஆயிரக்கணக்காகத் தள்ளுகிறார்களே, அந்தமாதிரி ஆகிவிட்டது கவிதைத் தொழில். -

அந்தக் காலத்தில் சென்னை ராஜதானிக் கலாசாலை, யில் பூண்டி அரங்கநாத முதலியார் என்ற பேராசிரியர் இருந் தார். அவர் நல்ல அறிவாளி. தமிழிலும் சிறந்த புலமை படைத்தவர். அவர் கச்சிக் கலம்பகம்’ என்ற நூலை இயற். றினார். அதை இயற்றிக்கொண்டு வரும்போது அந்தச் செய்தியைக் கும்பகோணம் காலேஜில் இருந்த சாது சேவையா என்ற அறிஞருக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித் தார். கடிதம் ஆங்கிலத்தில் எழுதியது. நான் கச்சிக் கலம் பகம் என்ற நூலை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறேன். (Manufacturing)" என்று அந்தக் கடிதத்தில் எழுதினார். தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதைக் குறிக்க எந்த வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்வார்களோ அதே வார்த்தையை அவர் போட்டிருந்தார். அவர் அதை வேண்டு. மென்றுதான் போட்டிருக்க வேண்டும். 'குயவன் சட்டி பானை செய்வது போலக் கவிதை என்ற பெயரால் கதையோ நாங்கள் உற்பத்தி செய்கிறோம் என்று சொல் வதைப் போலத் தொனிக்கிறது அவருடைய கடிதம். அதில் உண்மை இருக்கிறது. அந்தக் காலத்தில் வெளிவந்தசெய்யுள் நூல்களை எடுத்துப் பார்த்தால் அவையெல்லாம் இப்படி உற்யத்தியானவைகளே என்று சொல்லலாம். எங்கோ ஒன்று இரண்டு நன்றாக இருக்கலாம்.

ஒருவர் சில பாடல்களைப் பாடி ஒரு நூலை இயற்றினா ரானால் அதை அப்படியே வெளியிடமாட்டார். எங்கெங்கே புலவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய் அவர்க வளிடத்தில் சிறப்புப்பாயிரம் வாங்கி அவைகளையும் சேர்த்து அச்சிடுவார். பாட்டின் சிறப்பைப் படிப்பவர்கள் உணர்வ தற்கு அந்தப் பாட்டைக் காட்டிலும் இந்தச் சிறப்புப் பாயிரங்கள் கருவியாக இருக்கும் என்பது புலவருடைய