பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 44 கி. வா. ஜ. பேசுகிறார்

ஞாபகம்! இதில் விநோதம் என்னவென்றால், சில நூல் களின் மூலம் இருபது பாடல்கள் இருக்கும்; அந்தப் புத்தகத் துக்குச் சிறப்புப் பாயிரப் பாடல்களோ ஐம்பதுக்குமேல் இருக்கும்!

இவ்வளவும் புதிய செய்யுள் நூல் சம்பந்தமான சமா சாரம். ஆனால் பழைய நூல்கள் விஷயத்தில் அக்காலத்தின ருக்கு இருந்த ஆசையை நாம் போற்ற வேண்டும். பழைய தமிழ் நூ ல் க ைள வெளியிடுவதிலும் படிப்பதிலும் அவர்களுக்கு மிகுதியான விருப்பம் இருந்தது.

இப்பொழுது நமக்குக் கவிதையின்மேல் அவ்வளவு நாட் டம் இல்லை. பழைய கவிதையில் சில நூல்களைத்தான் நாம் படிக்கிறோம். அந்த நூல்களை நாமே படித்துப் பயன் பெறுவதைக் காட்டிலும், யாராவது அதில் உள்ள நயங் களை எடுத்துக் கட்டுரையாக எழுதியிருந்தால் அதை வாசிக்க முன் வருகிறோம். பழைய காலத்தில் யமகம், திரிபு முதலிய பல்லை உடைக்கும் பாடல்களை, பல் உடைந்தா லும் சரி, அவற்றை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முயற்சி இருந்தது. இப்பொழுதோ பாலைப்போலத் தெளிந்த கவிதையாக இருந்தாலும் கண நேரம் அதில் ஊன்றி நிற்கும் உணர்ச்சி இருப்பதில்லை.

இக்காலத்தில் நாளுக்குநாள் புதிய புதிய வசன புத்தகங் களும் பத்திரிகைகளும் புறப்படுகின்றன. இவ்வளவு அதிக மாக அந்தக் காலத்தில் வெளியாகவில்லை. பள்ளிக்கூடத்துப் புத்தகங்கள், நாவல்கள், புராண வசனங்கள் இவைகளே அக்காலத்து வசன புத்தகங்களில் பெரும்பாலானவை. பள்ளிக்கூடத்துப் புத்தகங்களில் பெயருக்குக் கதைகளும் கட்டுரைகளும் இருக்கும். உலகத்தில் புதிய புதிய துறை களில் எவ்வளவோ முயற்சிகள் நடைபெறுகின்றனவே, அவற்றைப் பற்றி ஒன்றும் இராது. ஏதாவது இருந்தாலும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்ததாகவே இருக்கும்’ இளைஞர்களுக்கு உற்சாகம் மூட்டக்கூடிய விஷயங்கள்