பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி ப் பு ைர

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகளில் 'மல்லிகை மாலை (8-10-1948), போர்க்கால காவியம்', 'அந்தக் காலம் வேறு (20-9-1944), கொச்சைத் தமிழ், “நாடோடிப் பாடல்கள் (24-6-1943), குறி சொல்லுதல் (14-2-1944), 'டாக்டர் உ. வே. சாமிநாதையர்' (27.4-1943), எல்லாம் சென்னை வானொலியிலும்; தமிழ் வசனத்துக்கு விஷயம் (5-2-1940), கட்டுரை(28.12.42, "சுரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் (25-12-1942) கனம் கிருஷ்ணையர் (29-9-1989) போன்றவை திருச்சி வானொலியிலும்; புறநானூறும் சரித்திரமும்’-என்பது சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஹைஸ்கூலில் ராவ்ஸாகிப் வையாபுரிப் பிள்ளையவர்கள் தலைமையில் நடைபெற்ற புறத்ானுர் று மகா நாட்டிலும் வாகீச கலாநிதி: கி.வா. ஜகந்நாதன் அவர்கள் பேசிய பேச்சுக்கள்.

கி. வா. ஜ. அவர்களின் தமிழ்ப் புலமை தனித் தன்மை வாய்ந்தது. அவருடைய எழுத்துத் தமிழுக்கும், பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் இல்லை என்று எடுத்துக் காட்ட, நவசக்தி ஆண்டு மலரில் வெளியான மண் சுமந்த கதை, சந்திராவில் வெளியான தமிழ் வசன நடை, கலைமகளில் வெளிவந்த வாத்தியார் ஐயா, தமிழ்த் தாத்தாவும் காந்தித் தாத்தாவும் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வெளியான ஒரே எழுத்து போன்ற கட்டுரைகளையும் இத்துடன் சேர்த்து வெளியிட்டுள்ளோம். -

இந்தக் கட்டுரைகள் தற்கால மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.

-பதிப்பகத்தார்