பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱然 கி. வா. ஜ. பேசுகிறார்

இப்படி ஒரு பழங்கதை உண்டு. கதையில் சொல்லப் பட்ட நிகழ்ச்சி சாத்தியமோ சாத்தியமன்றோ-அந்த விஷயம் வேறு. இந்த வரலாறு கலையின் தத்துவம் ஒன்றை அழகாக வெளியிடுகிறது.அழகின் ஒர் அம்சத்தைக் கலைஞன் கண்டு விட்டால் அதையே பற்றுக்கோடாகக் கொண்டு அந்த அழகைச் சம்பூர்ணமாக்கி மனோரம்யம் வாய்ந்த தாகச் செய்துவிடுவானென்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சித்திர சிருஷ்டிக்குமட்டும் பொருந்தியது இந்த உண்மை என்று கொள்ள வேண்டாம். எல்லா விதமான கலைகளின் விஷயத்திலும் இது பொருந்தும். இலக்கியமாகிய பெருங் கலைக்கு அதிகப் பொருத்தமுடையது. கவிஞனது கருத்து அவனது கற்பனா சக்தியொடு கலந்து பரிமளிக்கிறது. ஒரே கருத்தைப் பல மொழிகளில் பல கவிஞர்கள் தெரிவித்திருப்ப தைப் பார்க்கிறோம். ஆனால் அவ்வளவும் தனித்தனியே வெவ்வேறு அழகுடையனவாக விளங்குகின்றன. இந்த அழகின் பேதங்களைச் சிருஷ்டிப்பது கவிஞனது கவித்துவ சக்தியே ஆகும்.

இருபதாம் நூற்றாண்டில், இலக்கியப்பரப்பில் வசனம் ஒரு பெரும் பதியாக விளங்குகிறது. மேல்தாட்டில் ஆங்கிலம் முதலிய மொழிகளில் வசனமும் கவிதையின் அளவுக்கு-ஏன். உபயோகத்தில் கவிதைக்கு ஒருபடி மேலேகூட-உயர்ந்து விட்டதென்று சொல்லலாம். உலக முழுதும் உள்ள மொழி களில் வசன இலக்கியங்கள் மலிந்து வருகின்றன. தமிழ் மாத் திரம் அதற்கு எப்படி விலக்காக இருக்க முடியும்?

வசன சி ரு ஷ் டி க் குக் கற்பனாசக்தி வேண்டுவது அவசியம். ஆனால் அந்தக் கற்பனை படர்வதற்கு ஊன்று. கோல் வேண்டாமா? கவிஞன் கண்ணும் கருத்தும் கொண்டு பிடிக்கும் படங்களை விரிவாக்கிக் கற்பனை வர்ணம் பூசிச் சித்திரிக்கிறான். வசன இலக்கிய கர்த்தாவும் அப்படித்தான் செய்கிறான்.