பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

off of கி. வா. ஜ. பேசுகிறார்

கானலாம். அவை நல்ல வசனத்துக்கு ஏற்ற விஷயங்

களல்லவா? -

இலக்கியத்தைப் பா ர் ப் .ே பா ம். கவிஞர்களுடைய உன்னத்தைக் கவருகின்ற காதலையும் வீரத்தையும் பழைய சங்க நூல்களிலே காண்கிறோம். கவிஞர்களுடைய பாவனா சித்திரங்களையும், சரித்திரத் துணுக்குகளையும் அந்தக் காலத்துப் பாஷையில் அந்தக் காலத்துச் சம்பிரதாயத்தில் அவை காட்டுகின்றன. அவற்றை மாற்றி அவற்றிலுள்ள விஷயத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு நவீன் வசனத் திலே நவீன அமைப்பிலே பொருத்திக் காட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்! -

ஒரு சிறிய காட்சி காதலனும் காதலியும், மரங்கள் இல்லாமல் வெறுமையாக உள்ள பாலைவனத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய காதலை உணர்ந்து கொள்ளாத பெற்றோரைப் பிரிந்து வேறு ஊருக்குப் போகிறார்கள்; வெம்மை மிகுந்த பாலையிண் கொடுமை யைக் காதலின்பத்தில் மறந்து செல்கிறார்கள்.

எதிரே சில கிழவர்கள் வருகிறார்கள். இயற்கையாகவே கூர்மையை இழந்திருந்த அவர்கள் கண்களுக்குப் பசுமை யென்பதே மருந்துக்கும் காணாத பாலைநிலத்தின் வறண்ட காட்சி மிக்க அயர்ச்சியை உண்டாக்குகிறது.

காதலனும் காதவியும் தோன்றுகின்றார்கள், முதியவர் களுடைய கண்கள் அவ்விருவருடைய உவகை ததும்பும் முகங்களிலே சென்று பதிந்து விடுகின்றன. பசுமைக்கு வெறித்தும்போயிருந்த அவை அந்த இரண்டு முகமலர்களில் தோற்றிய குளிர்ச்சியையும் அழகையும் முகந்து முகந்து உண்கின்றன.

ஒரு கிழவர் மனத்தில் இந்தத் திருப்திக்கு இடையே மின்வெட்டுப் போல ஒரு பழைய ஞாபகம் பளிச்சென்று தோற்றியது. அகத்தே தோற்றிய அந்தக் காட்சியையும்