பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வசனத்துக்கு விஷயம் 6嵌

புறத்தே கண்ட இவ்விரு காதலருடைய காட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். 'என்ன ஆச்சரியம்! தெய்வ சக்தி எவ்வளவு ஆச்சரியமானது” என்று கூறி வியக்கின்றார்.

காதலர்கள் தம் வழியே சென்றனர். அந்தக் கிழவர். சிறிது நேரம் இப்படி ஸ்தம்பித்து நின்றார். உடன் செல்ப வர்கள் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டார்களே ஒழிய, அவர் அகற்துள்ளே கண்ட காட்சியை. அறியவில்லை. -

"என்ன ஆச்சரியத்தைக் கண்டுவிட்டீர்?' என்று. ஒருவர் கேட்கிறார்.

இப்போது போனார்களே, இந்த ஜோடியைப் பார்த். திரா எவ்வளவு ஒற்றுமையாக, சந்தோஷமாக இணைந்து செல்கிறார்கள்! இவர்களைக் கண்டவுடனே அந்தக் காட்சி: நம் கண்களில் எவ்வளவு ஜில்லென்று படுகிறது! இரண்டு. மலர் மாலைகளை ஒன்று சேர்த்துக் கட்டி வைத்தாற்போல. அல்லவா இருக்கிறது? ஆனால்-' கிழவர் மறுபடியும் தம் உள்ளக் காட்சியிலே ஈடுபட்டு விட்டார். * - -

"என்ன ஆனால்? சீக்கிரம் சொல் லு ம் ' என்று. ஆவலாய்க் கேட்கிறார் நண்பர். -

"இவர்களையே நான் எட்டு வருஷத்துக்கு முன் பார்த். திருக்கிறேன். அப்போது இவ்விருவரும் சிறு குழந்தைகள். படுசுட்டிகள். இந்த இரண்டு பேரும் இவ்வளவு இணைந்து செல்கிறார்களே; அன்றைக்குப் பார்க்க வேண்டும் அந்தக் கோலத்தை. இவன் அவள் மயிரைப் பிடித்து இழுக்கிறான்;. இவள் அவன் மயிரைப் பிடித்து உலுக்குகிறாள். இந்த மயிர்பிடி சண்டையில் இரண்டு வீட்டுப் பாட்டி மார் களும் வந்து விலக்கிப் பார்த்தார்கள். தெருவே கூடி விட்டது. ஏக அமர்க்களம். குழந்தைச் சண்டை குடும்பச் சண்டையாக மாறிப் பிரமாதமாகி விட்டது. அந்தச் சிறு: பெண் இவன் தலை மயிரை இழுக்க, இவன் அவள் மயிரை