பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கி. வா. ஜ. பேசுகிறார்

பாஷையாக மாறிக்கொண்டு போக வேண்டி யிருக்கும். இலக்கிய சிருஷ்டி ஒரு கலை. எழுத்தாளன் வாழ்க்கையி லுள்ள விஷயங்களை அழகாகக் காட்டுகிறான். பிழை இல்லாமல் தெளிவும் அழகும் சம்பூர்ணமாக இருக்கும்படி அமைக்கும் ஒருகடினமான காரியத்தை அவன் செய்கிறான். வாழ்க்கை வேறு; வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம் வேறு; வாழ்க்கையில் எல்லோரும் இன்பத்தைக் காணுவது அரிது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய இலக்கியத்திலே இன்பத் தைக் காணலாம். கள் குடித்தவன் பேச்சை நாம் நேரே கேட்பதற்கும் அதை இலக்கிய மூலமாகக் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னது வெறும் வாழ்க்கை; பின்னது. ரஸ்முள்ள இலக்கியம்.சோகத்தை நாம் விரும்பமாட்டோம். சோக ரஸத்தை விரும்புகிறோம். - - .

இலக்கியத்திலே ஓர் ஒழுங்கு அவசியம். ஆனால் அந்த ஒழுங்கு, அழகுக்கு வேலி போடுவதாக இருக்கக் கூடாது; ஆபாசத்தைத் தடுப்பதாகவே இருக்க வேண்டும்.

'மாடும் ஆடும் வந்தது' என்று. பேசுகிறோம் மாடும் ஆடும்வந்தன என்று எழுதுவதனால் அதன் அழகு குறைந்து விடவில்லையே. பலவகை என்ற அர்த்தம் உள்ள நானா விதம் என்ற தொடரை, நாலா விதம் ஆக்கி, நாலா பக்கம், நாலா திசைகளில் என்று எழுதுகிறோம். நானா பக்கம் என்றாவது நாலுயக்கம் என்றாவது இருப்பதுதான் ஒழுங்கு. 'நாலா பக்கம் என்று பேசுகிறோமே; அதில்தான் ஜீவன் இருக்கிறது” என்றால், இனிவரும் அகராதியில் அதிகப் பக்கம் சேர்வதைத் தவிர அழகு அதிகப்படுவதாகத் தோன்ற வில்லை. . . -

"ராமனாகப்பட்டவன் அம்புகளை எடுத்தான், களைப் பிரயோகம் பண்ணிண்டே போனான் என்று ராமாயண சாஸ்திரிகள் பிரசங்கம் செய்கிறார். அவர் எவ்வளவோ கொச்சை வார்த்தைகளைப் புங்கா துபுங்க. மாகப் பொழிகிறார். கேட்பவர்கள் ரசிப்பதில் குறை