பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪

V1

வானொலி நாடகத்தில் ஒவி மூலமாகவே பாவத்தை வெளிப்படுத்தும் புதுமை ஏற்பட்டது போல .ே வ, வானொலிப் பிரசங்கங்களிலும் ஒரு தனி முறை அவசிய மாயிற்று. வானொலி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலுமே ஒவியே பலவித உணர்ச்சிகளை எழுப்புகின்றது. எல்லாப் பொருளையும் தோற்றுவிக்கும் மூலதத்துவம் நாதம் என்று தத்துவ நூலார் சொல்வார்கள். வானில் எழும் ஒலி, நாடக பாத்திரங்களையும், போர் நிகழ்ச்சிகளையும், பிரசங்கப் பொருளையும் கேட்போர் உள்ளத் தடத்தில் உருவுருவாகக் காட்டி இன்புறுத்துகின்றது.

மேடையின்மேல் ஏறிப் பேசுகிறவர் செய்யும் பிரசங்கத் துக்கும் ரேடியோப் பிரசங்கத்துக்கும் பலபல வேறுபாடுகள் உண்டு. மேடைப் பிரசங்கி தன் உருவத்தைக் கொண்டும், வாய் அசைவைக்கொண்டும் முகத்தோற்றத்தைக்கொண்டும் கை அசைவுகளைக் கொண்டும் சில வகையான குறிப்புத் களைக் கேட்போர் உள்ளத்தில் பதியச் செய்கிறான். அவன் பேசும் பேச்சில் செறிவு அதிகமாக இருப்பதில்லை. ஒரே விஷயத்தைப் பல உதாரணங்களால் விளக்கியும், மீட்டும் மீட்டும் சொல்லி வற்புறுத்தியும் பிரசங்கம் செய்கிறான். நிதானமாக விஷயங்களைச் சொல்கிறான்.

கேட்போர் அவனைப் பார்ப்பதிலும், கேட்போரை அவன் பார்ப்பதிலும் சில நன்மைகள் உண்டு, பிரசங்கத்தி னால் அவன் வெளிப்படுத்தும் கருத்துக்களை அவனது முகக் குறிப்பு முதலியவை பின்னும் சுவையுடையனவாகச் செய் கின்றன கேட்பவர்களுடைய உத்சாகத்தை நேரே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதனால், அவ்வப்பொழுது அதை மிகுவிப்பதற்கு வேண்டிய தந்திரத்தை அவன் மேற்கொள்ள லாம். சொல்லுகின்ற கருத்து மிகவும் நுண்ணிதாகத் தலைவலி யெடுக்கும்படி இருக்கிறதென்று வைத்துக்கொள் வோம். சாமர்த்தியசாலியான பிரசங்கி கேட்பவர்களின்