பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் டு ைர 79%

காட்டிலும் கட்டுரை அமைப்பிலே சுவை ததும்பி நிற்பவை அக்கட்டுரைகள்.

ஹாஸ்யச் சு ன வ ைய அதிகமாகக் கொண்டுள்ள கட்டுரைகளும் தமிழில் வந்திருக்கின்றன. கல்கி எழுதிய கட்டுரைகளிற் பலவும், சிட்டியின் சிருஷ்டிகளும் இந்த ரகத் தைச் சேர்ந்தவை.

சிந்தனையைக் கிளர்த்தக் கூடியனவாய், படிக்கப் படிக்க ஆழ்ந்த கருத்தைத் தோற்றுவிக்கும் கட்டுரைகள் ஆங்கிலத் தில் ஆயிரக்கணக்காக உள்ளன. தமிழில் வ. ரா. வின் கட்டுரைகளில் ஒரு பகுதியை அந்த வகையிலே சேர்க்கலாம்

உணர்ச்சி யூட்டுவனவாய் விறுவிறுப்பான போக்கோ டுள்ள கட்டுரைகள் தமிழில் கணக்கில்லாமல் வெளிவந்திருக் கின்றன. அந்தக் கட்டுரைகளுக்கு வழி காட்டியவர் தேசீய கவி சுப்பிரமணிய பாரதியாரே. அவருடைய கட்டுரைகளிற். பல சிறந்த கட்டுரைகளோடு சேர்ப்பதற்குரியன அல்ல. அவருடைய கவிதையில் உள்ள ஆழம் அவற்றில் காண்பது அரிது. ஆனாலும் மின்சார ஒட்டம்போல இருக்கும் அவரது நடை கட்டுரைகளுக்குச் சுவையூட்டுகிறது. உணர்ச்சி வெறி பிடித்த ஒருவர் நம்முன் நின்று பேசும்போது நிமிஷத்திற்கு நிமிஷம் ஸ்வரம் ஏறி இறங்குகிறதே, அந்த மாதிரி அவரு டைய கட்டுரைகளின் போக்கு இருக்கிறது. சில கட்டுரை ஆகள் தீயைக் கக்கும். அத்தகைய கட்டுரைகளிலிருந்துதான்

இந்தக் காலத்து அரசியல் பிரசாரகர்களும், மறு மலர்ச்சி" எழுத்தாளர்களும் நடையைக் கற்றுக்கொண்டார்களென்று சொல்வது தவறாகாது

ஒருவருடைய குணத்தைச் சித்திரித்துக் காட்டுவது, ஒரு நிகழ்ச்சியை வருணித்து அமைப்பது முதலிய கட்டுரைகள் ஒவியத்தைப் போன்றவை. அறிந்த விஷயத்தை எழுத். தாளன் தன் கலைத் திறமையால் மெருகு கொடுத்து வெளிப்படுத்துகிறான். இந்தத் துறையில் மகா மகோபாத்தி: