பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 கி. வா. ஜ. பேசுகிறார்

யாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் சிறந்து விளங்கினார். அவர் தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சி களையும், தாம் சந்தித்த பல மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுவது போல எழுத்தில் காட்டியிருக்கிறார். நிகழ்ச்சி எந்தக் காலத்தில் எந்த இடத்தில் நிகழ்ந்ததோ அதன் மணம் (Atmosphere) பூர்ணமாக அந்தக் கட்டுரை யில் நிலவுகிறது. அதனால் படிக்கிறவர்கள் அந்த மனிதர் களோடும் பண்டங்களோடும் மனத்தால் குலாவத்தொடங்கு கிறார்கள். ஜனங்களுடைய குண சித்திரங்களை வகுப்ப தற்கு நல்ல அநுபவம் வேண்டும், பல மனிதர்களோடு பழகிய மூதறிவுடைய அப்பெரியாருடைய கட்டுரைகளில் அத்தகைய சித்திரங்கள் பலவற்றைக் காணலாம். வ. ரா. எழுதிய தடைச் சித்திரங்கள், சி. ஆர். பூரீநிவாசன் எழுதிய தராசு, 'கல்கி சிலரைப்பற்றி முன்பு எழுதிய கட்டுரைகள் இவைகளெல்லாம் இந்த வகையில் சேர்வதற்குரியன.

இலக்கிய சம்பந்தமான கட்டுரைகளைச் சில அறிஞர் கள் எழுதியிருக்கிறார்கள். ஆராய்ச்சிக் கட்டுரைகளென்று அவற்றைச் சொல்லலாம். வ. வே. சு. ஐயர் கம்பராமாய ணத்தின் அழகை அலசிக் காட்டி எழுதியுள்ள விமரிசனக் கட்டுரை தமிழ் நாட்டுக்கு ஒரு செல்வம். -

தமிழ் மொழியின் பரப்புக்கு இவ்வளவு போதாது. தமிழ் நாட்டில் இன்று யாரேனும் எழுத்தாளரென்று பெய ரெடுக்க வேண்டுமானால் கதை எழுதுகிறார்கள்; கதை எழுதுவதோடு நின்றுவிடுபவர்களே பலர்.

உலக அநுபவத்தையும் நூலறிவையும் பயன்படுத்து வதற்குக் கட்டுரையைப் போன்ற மார்க்கம் வேறு இல்லை. சிந்தனா சக்தியும் எழுத்துத் திறமையும் உடையவர்கள் கட்டுரைகளை எழுத முயன்றால் தமிழில் சிறந்த கட்டுரை கள் இல்லையென்ற குறை தீர்ந்துவிடும். .

மாணாக்கர்கள் வகுப்பில் எழுதும் கட்டுரைகளிலே இலக்கியச் சுவை அமையும்படி பழக வேண்டும். விஷயங்