பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடோடிப் பாடல்கள் 37

வீராயியின் வீரத்தைப்பற்றிய ஒரு பாட்டு : வீராயிக்கு ஒரு சோம்பேறிப் புருசன்வந்து வாங்த்தான். கல்யாணமான புதிசு. அவனுக்குச் சம்பாதிக்கவோ வழி கயில்லை. எங்கெங்கோ சுற்றிவிட்டு வீட்டுக்கு வருகிறான். புதுமாப்பிள்ளைவந்தால் உபசாரம் பண்ண வேண்டாமோ? விராயியைப் பார்த்து ஒரு சிநேகிதக்காரி சொல்லுகிறாள்

ஏகுட்டி வீராயி, உன் புருசன் வாராண்டி வீட்டை மொழுகடி வெள்ளிப்பாயைப் போடடி கிள்ளிமுள்ளிச் சந்தனத்தைக் கிட்ட எடுத்து வையடி மதுரைக் கோட்டை வெத்தலை மடிச்சு மடிச்சு வையடி ஒழுக ஒழுகச் சந்தனத்தை மார் நிறையப் பூசடி ஏகுட்டி வீராயி உன்புருசன் வாராண்டி இதற்குள்ளே அவன் பக்கத்தில் வந்து விட்டான். "இந்தச் சோம்பேறிக் கழுதைக்குச் சந்தனமாம், வெற்றிலை யாம்' என்று வீராயி எண்ணுகிறாள். எத்தனை தடவை அவனை வேலைக்குப் போகும்படி அவள் இடித்துச் சொல்லி பிருக்கிறாள் தெரியுமா? அவனுக்கு உறைத்தால்தானே? அவனும் ஆண் பிள்ளையா? சி .

அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தன் சிநேகிதக்காரிக்குப் பதில் சொல்கிறாள் வீராயி : பச்சைநெல்லும் கிச்சநெல்லும் குந்துவான்னா இருக்கறே பதினெட்டுப் பணியாரம் சுடுவான்னா இருக்கறே -- கொட்டாங்கச்சி மாப்பிள்ளையை அழைப்பான்னா -

. - இருக்கறே ஒழுகஒழுகச் சந்தனத்தைப் பூசு வான்னா இருக்கறே பாக்குமரத்திலே பாக்கில்லே . பண்டாரத் தோப்பிலே பூவில்லை நேத்தறுத்த சாவலுக்கு நெத்தமும் இல்லை-இந்தப் புத்திகெட்ட மவனுக்கு வெக்கமும் இல்லை.

இந்தப் புத்தி கெட்ட மவனுக்கு வெக்கமும் இல்லை’ என்ற முத்தாய்ப்பு வெறுமனே வந்திருக்குமென்றா நினைக்