பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wii

முகக் குறிப்பிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம். அப்பொழுது ஊறுகாயைப் போல இடையிலே ஹாஸ்ய ரஸத்தைக் கொண்டுவந்து, தன் முன்னே இருப்பவர்கள் முகத்தில் ஒளியை உண்டாக்கலாம்.

இத்தகைய அதுகூலங்கள் ரேடியோப் பிரசங்கிகளுக்கு இருப்பதில்லை. எவ்வளவோ விதமான கட்டுப்பாடுகள் அங்கே உண்டு. அவை அவசியந்தான் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனாலும் கட்டுப்பாடு கட்டுப்பாடுதானே?

ஆள் யாரும் இல்லாமல், நமக்குக் காவலாக வரும் ரேடியோ உதவியாளர் ஒருவர் மட்டும் இருக்க, காற்றுக் கடப் புகாத அறையில் தனியே இருந்து பிரசங்கம் செய் கிறோம். நாம் செய்வது பிரசங்கம் என்ற நினைவே ஏற்பட இடம் இல்லை. வானொலிக் கருவிக்கு முன்னாலே உட்கார்ந்து கொண்டு, எழுதிக்கொண்டு போயிருக்கிற பிரசங்கத்தை வாசிக்கிறோம். எதிரே உட்கார்ந்திருக்கும் அன்பர் அவ்வப்போது ஊமைச் சாடையால் மெதுவாக வாசிக்கலாமென்றும், வே க ம .ாக ப் போகலாமென்றும் குறிப்பிடுகிறார். ஹாம், ஹல்ம் என்ற சப்தம் இல்லாமல், இருமாமல், தும்மாமல், கனைக்காமல் கதறாமல், முனகா மல், பெருமூச்சு விடாமல், நாமும் கிட்டத்தட்ட ஒரு யந்திரத்தைப்போலப் பிரசங்கம் செய்ய வேண்டும்.எழுதிப் படிப்பதை, ஆன் இல்லாத அறையில் படிப்பதைத்தான் பிரசங்கம் என்று சொல்கிறோம். அந்தப் பிரசங்கம் பத்து அல்லது பதினைந்து நிமிஷத்துக்கு மேலே போவதில்லை. மணிக் கணக்காக மேடைமேல் ஏறிப் பொழிந்து தள்ளும் வழக்கம் உள்ளவர்களுக்குக்கூட அந்தப் பத்துப் பதினைந்து நிமிஷம் வானொலிப் பிரசங்கம் செய்வதற்குள் வேர்த்து விறுவிறுத்துப் போகிறது.

அதற்குக் காரணம் கட்டுப்பாடுதான். குறுகிய காலத் தில் உயிரில்லாத யந்திரத்துக்கு முன் உட்கார்ந்து கொண்டு,