பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கி. வா. ஜ. பேசுகிறார்

மோகம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. மனிதன் சமுதாய உணர்ச்சியோடு பவபேராகக் கூடி வாழும் முயற்சியை எப். பொழுது ஆரம்பித்தானோ அப்பொழுது முதலே இது பிறந்து வளர்ந்து வந்திருக்க வேண்டும். அதைத் தணிக்கும் மனிதர்களும் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இக் காலத்தில் விளம்பரப் பலகையோடு தொழில் நடத்துபவர் களைப்போல அவர்கள் இருக்கவில்லை. -

தமிழ் நாட்டில் பழங்காலத்தில் ஒரு விதமான ஜோஸ்யர் களும், ரேகை சாஸ்திரிகளும் இருந்தார்கள். அவர்கள் சமுதாயத்தின் ஆதரவிலே வாழ்ந்து வந்தார்கள். அந்த ஜோஸ்யர்களும் ரேகை சாஸ்திரிகளும் இப்பொழுதும் இருக் கிறார்கள். ஜோஸ்யர் யார் தெரியுமா? வள்ளுவர் என்று கிராமங்களிலே சொல்வார்கள். அவரே பழங்கால முதற் கொண்டு ஜோஸ்யர் ஸ்தானத்தை வகித்து வந்திருக்கிறார். ரேகை சாஸ்திரி இன்னார் என்று உங்களுக்குத் தெரிந் திருக்காது. அந்த ரேகை சாஸ்திரி கை ரேகைகளைப் பார்த் துத்தான் பலன் சொல்வார்; ஆடம்பரம் இல்லாமல் ஊர் ஊராகத் திரிந்து கை ரேகைகளைப் பார்த்துப் பலன் சொல்லி அரிசியோ, உப்போ, புளியோ, குழந்தை தலைக்கு எண்ணெயோ, பிண்னாக்கோ, ஷம்மானமாக வாங்கிக் கொள்ளும் அந்த ரேகை சாஸ்திரியை நீங்கள் பார்த்திருக்க லாம் . குறி சொல்லும் குறத்தியைப் பார்த்ததில்லை: அந்த நாடோடிதான் நான் சொல்லும் ரேகை சாஸ்திரி. .

நாடோடியாக வாழ்க்கை நடத்தும் இக்காலக் குறத்தி களுக்கு ரேகை சாஸ்திரம் அவ்வளவாகத் தெரியாது; கூடை முறம் கட்டத் தெரியும். ஊசி வாங்கலையோ, ஊசி; லவுக்கை தெக்கற ஊசி' என்று முழங்கத் தெரியும். அவர் களுடைய முன்னோர்கள் குறி சொல்லி ஜனங்களுக்குச் சந்தோஷம் உண்டாக்கி ஜீவனம் செய்து வந்தார்கள்.

இந்தக் கவிஞர்கள் இருக்கிறார்களே, அவர்கள் எதைக் கண்டாலும் கவிதையாகப் பாடி விடுகிறார்கள். நம்முடைய