பக்கம்:கீதைப்பாட்டு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ክከO கீதைப் பாட்டு யோகிகள் பற்றுதலைக் களைந்து. ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும், அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார். யுக்த: கர்மபலந் த்யக்த்வா சாந்தி-மாப்னோதி நைஷ்ட்டிகீம் அயுக்த: காமகாரேண பலே லக்தோ நிபத்த்யதே 12. உயிரிற் புணர்வுள் ளவன்கன் மபலன் உளம்விட் டடைவன் றிரசாந் தியினை உயிரிற் புணர்வில் லவனோ நசையே வுதலிற் பயன்வேட் டவன்பந் தமுறும். *PTG யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான் யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான். - லர்வகர்மாணி மனலா லந்ந்யஸ்யாஸ்தே லகம் வசி நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயன் 13. துளையொன் பதுடைப் புரியின் மனனாற் றொழில் யாவையும் வைத்தொருதே கிவினை விளையான் விளைவிக் கலன்றன் வயமே வினனாய் மகிழ்வின் னுளனா குகவே. גוג" தன்னை வசங்கொண்ட ஆத்மா, எல்லாக் கர்மங்களையும் மனதால் துறந்து. எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி. ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான். ந. கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு: ந கர்மபல-ஸ்ம்யோகம் ஸ்வபா வஸ்து ப்ரவர்த்ததே 14. வினையிற் றலைமைப் படலின் னுலகில் விளையுண் டுபனா தவனோ பிரபு. வினையிற் பயனோ டுபுணர்ப் பிலனாய் வினைவா சனையே முகக்கிற்ப துவால், 278 செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல்-இவற்றுளெத னையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/111&oldid=799654" இலிருந்து மீள்விக்கப்பட்டது