பக்கம்:கீதைப்பாட்டு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கீதைப் பாட்டு கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும் பசுவினிடத்தும் யானையினிடத்தும், நாயினிடத்தும் நாயைத் தின்னும் புலையனிடத்தும் பண்டிதர் சமப்பார்வையுடையோர். இஹைவ தைர்ஜித ஸர்க்கோ யேஷாம் லாம்யே ஸ்த்திதம்மன: நிர்தோஷம் ஹறி ஸ்மம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்த்திதா: 19. ஒத்துள் ளுணர்வின் னெவருள் ளமுளார் உவரான் வெலலாய பிறப்பிவனே ஒத்துக் கரிசில் லதன்னோ பிரமம் உவரோ பிரமத் துளரா லதனால், 223 மனம் சம நிலையில் நிற்கப்பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சம நிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலை பெறுகிறார்கள். ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்யசாப்ரியம் ஸ்த்திரபுத்தி-ரலம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்த்தித; 20. பிரமந் தெரிந்தோன் பிரமத் திருப்போன் பிறமூட மில்லோன் றிரபுத்தி யுள்ளோன் பிரியம் புகுந்து மகிழற்க விகழப் பெறுமஃத டைந்தும் வெருளற்க வம்மா. 224 விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான் பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான் பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி பிரம்மத்தில் நிலை பெறுகிறான். பாஹ்ய-ஸ்பர்சேஷ்-வலக்தாத்மா விந்தத்-யாத்மனி யத் லூகம் ஸ் ப்ரஹ்மயோக-யுக்தாத்மா ஸ் கம கூடிய-மச்னுதே == 21. வெளியிற்பொறி தொடுதற்குள நசையற்றவ னுயிரின் மிசையேசுக மடைகிற்பவ னெவனோவவ னம்ம உளனரிற்பிர மத்தைப்புனர் வுற்றுப்புரி யோகன் ஒருநாளினு. மழியாது சகமுண்டவனாவன். 2.25 புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை Этu o:=}}}}тәo.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/113&oldid=799656" இலிருந்து மீள்விக்கப்பட்டது