பக்கம்:கீதைப்பாட்டு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸந்நியாஸ் யோகம் 113 யே ஹி ஸம்ஸ்பர்சஜா போகா து: க்க-யோனய ஏவ தே ஆத்யந்த விந்த கெளந்தேய ந தேஷ ரமதே புத: 22. விடய மைந்து பொறிகொடுங்கண் விளைசு கங்களெவையவை விழுமமென்ப துதயமாகு முழுமை யேது வேயலோ அடியுமுள்ள முடிவுமுள்ள வாகுமன்ன வற்றிலே அகம் விரும்ப விலை தெளிந்த வறிவன்குந்தி புதல்வனே. 226 புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்க ளாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை. சக்னோதீஹைவ ய: லோடும் ப்ராக் சரீர- விமோகூடினாத் காமக்ரோதோத்பவம் வேகம் ல யுக்த: ஸ ஸ்கீ நர: 23. தன்மெய் விடுமுன் னெவனிப் பொழுதே தன்கா தல்சினன் விளைவே கமதை மன்னுந் தடைசெய் யும்வலத் தவனோ மனிதன் னவன்யோ கியவன் சுகியால், 227 சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்கவல்லானோ அந்த மனிதன் யோகி, அவன் இன்பமுடையோன். யோsந்த ஸ்ேைகாsந்தராராமஸ்-ததாந்தர்-ஜ்யோதிரேவ ய: ல யோகி ப்ரஹ்ம நிர்வாணம் ப்ரஹ்மபூதோ Sதிகச்சதி 24. எவன்மகிழ்வ னோதனது ளெவன் பொழிலு ளானவிதம் எவன்றனது ளேயொளிர் வனோ அவன்பிரம மாகியவன் பிரம் நிருவாணமதை அடைவதுறும் யோக முடையோன். 228 தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/114&oldid=799657" இலிருந்து மீள்விக்கப்பட்டது