பக்கம்:கீதைப்பாட்டு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் o தன்னை வென்று ஆறுத லெய்தியவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக - - துக்கங்களிலும்_மானாபமானங்களிலும் சம நிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறத. ஜ்ஞான-விஜ்ஞான-த்ருப்தாத்மா கூடஸ்த்தோ விஜிதேந்த்ரிய: யுக்க இத்-யுச்யதே யோசீ லம-லோஷ்டாசம-காஞ்சன: * அறிவிற்பகுத்தறிவி னிறைவுற்ற சித்தமுட னசைவற்ற கூட மொத்துப் பொறியைச் சயித்துநிதி சுடுமட் சில் கற்குநிகர் புரியோகி யென்ப தக்கோன். 247 ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்திகொண்டவனாய், மலை முடியில் நிற்பான் போன்று. புலன்களை வென்று ஒட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றா னெனப்படுவான். (ஞானம் என்பது கடவுளியலைப் பற்றிய அறிவு விஞ்ஞானம் என்பது உலகவியலைப் பற்றியது) லாஹ்ருன்-மித்ரார்-யுதாnந மத்த்யஸ்த்த-த்வேஷ்ய பந்துவுலாதுஷ்வபி ச பாபேஷ ஸ்மபுத்திர்-விசிஷ்யதே 9. நலவிருப்புளார், நடுவ னோரயல் நண்ப்ர் வெம்பகை தமர்வெ றுப்பவர் அலசெய் வார்கள் சாதுவர்கள் பாலுமே அகனி லொப்பவே நினைவன் மேலவன். 242 அன்பர். நட்டார். பகைவர். ஏதிலர் நடுவர், எதிரிகள் சுற்றத்தார், நல்லோர். தீயோர், எல்லோரிடத்தும் சமபுத்தியுடையோன் மேலோனா வான். யோகீ யுஞ்ஜீத ஸதத-மாத்மானம் ரஹஸி ஸ்த்தித: ஏகாகீ யத-சித்தாத்மா நிராசீ-ரபரிக்ரஹ: 10. மனம் விழைவறுத் தெதினு மெனதெனும் விருப்பம்விட மனநினைவொ டுக்கும் யோகி தனிமை யினிலெப் பொழுதும் ரகசிய தலத்தினமர் தருபுதனை வைக்க யோகின். 2-13 மறைவிடத்தில் இருந்து கொண்டு, தனியனாப் உள்ளத்தைக் கட்டி ஆசையைத் துறந்து. ஏற்பது நீங்கி எப்போதும் ஆத்மாவில் யோகமுறக் கடவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/120&oldid=799664" இலிருந்து மீள்விக்கப்பட்டது