பக்கம்:கீதைப்பாட்டு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் 121 நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மசாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான். யுஞ்ஜன்-னேவன் ஸ்தாத்மானம் யோகி நியத-மானல: சாந்திம் நிர்வான-பரமாம் மத்-ஸ்ம்ஸ்த்தா-மதிகச்சதி 15. அகமிப்படி யெப்பொழு தத்துமியைந் தசையா மனமேவிய யோகியெனா தகமுற்ற சகத்தி னுயர்ச் சியதா யவிர் சாந்தியை யெய்துவ னாவனரோ, 248 இங்ங்னம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் யோகமுற் றிருக்கும் யோகி என்பதால் நிலைபெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலை யிலுள்ள ஆறுதலை யறிவான். நாத்யச்னதஸ்து யோகோsஸ்தி நசைகாந்த-மனச்னத: ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜூன 16. மிகவி டுப்பவற் குளதில் யோகுனா மிகம டுப்பவற் கென்னி னோவிலை மிகவு றங்கியல் புடைய னுக்குமில் விசய கண்விழிப் பவன்ற னக்குமில். 249 மிகைபட உண்போனுக்கு யோகமில்லை. உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜூனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை. யுக்தா ஹார-விஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மலை யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:க்கஹா 17. அயிறன்மித மாகிவினை யாடன்மித மானோன் அவ்வினை செயற்கண்முய றன்மிதம தானோன் துயிறன் மித மாகிநன வும் மிதம் தானோன் - சோகமிலை யாகியுள யோகமுழு தெய்தும். 25 O ஒழுங்குக்குட்பட்ட உணவும். விளையாட்டும் உடையோனாய், வினை களில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய் உறக்கத்திலும் விழிப் பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/122&oldid=799666" இலிருந்து மீள்விக்கப்பட்டது