பக்கம்:கீதைப்பாட்டு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் 123 புத்தியால் தீண்டத்தக்கதும் புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ. எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ, யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத: யஸ்மின் ஸ்த்திதோ ந து: க்கேன குருனாபி விசால்யதே 22. எதனையெய்திவே றதனின் மிக்கபே றெனநி னைப்பது மில்லை யாகுமோ எதிலி ருப்பவன் பெரிய தாகிய இடரினுஞ்சலிப் படைகி லானரோ, 255 எதனை யெய்தியபின், அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருதமாட்டானோ. எங்கு நிலைபெறுவதாய்ப் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ, தம் வித்யாத்து:க்க-ஸ்ம்யோக-வியோகம் யோகலம்ஜ்ஞ தம் ல நிச்சயேன யோக்தவ்யோ யோகோநிர்விண்ண சேதலா 23. அதையோக மென்னும் பெயருள்ள தோடும் அளுர்கூட னின்றும் பிரிவிப்ப தாவோர் அதுயோக நிச்சயத்தோடு துன்பம் அறுமின்ப நெஞ்சான் முயலத்த குங்காண். 256 அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலை யென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி, உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான். லங்கல்ப ப்ரபவான் காமான் த்யக்த்வா ஸர்வா-னசேஷத: மனலை-வேந்த்ரிய-க்ராமம் விநியம்ய லமந்தத: 24 சிந்திப்பின் விளைகின்ற வெல்லா வவாவுஞ் சேடம்மி லாதுள்ள மேகொள்ள விட்டே ஐந்திந் திரியமும் மெலாவைம் புலன்க - ளவைநின்று முள்ளத்தி னாலேயடக்கி. 257 சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனதால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி. (சங்கல்பம் - மனத்தீர்மானம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/124&oldid=799668" இலிருந்து மீள்விக்கப்பட்டது