பக்கம்:கீதைப்பாட்டு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் 125 குற்றங்களைப் போக்கி இங்ங்ணம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான். லர்வபூதஸ்த்த-மாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி ஈகடிதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர லமதர்சன: 29. எங்குஞ் சமநோக்கிய யோகுடனர் இதயத் தவனெந் தவுயிர்க்கனுந்தான் தங்கும் மியல்பா கவுமெஸ் வுயிருந் தனகண் ணுளவா கவுநோக் குவனால், 252 யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும் தன்னுள் எல்லா உயிர்களுமிருப் பதையும் காணுகிறான். யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸ்ர்வஞ்ச மயி பச்யதி தஸ்யாஹம் ந ப்ரனச்யாமி ல ச மே ந ப்ரனச்யதி 30. எவனென்னை எல்லா விடத்துங்கண் கானும் என்கண் னெலா வற்றையுங் காண கிற்கும் அவனுக்கு யானோ மறைந்தேனு மாகேன். அவனும் மெனக்கே மறைந்தானு மாகான். 26.3 எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன். எனக்கவன் அழியமாட்டான். லர்வபூதஸ்த்திதம் யோ மாம் பஜத்-யேகத்வ-மாஸ்த்தித: லர்வதா வர்த்தமானோபி ல யோகி மயி வர்த்ததே 31. எவனொன்று படுதன்மை யினிதெய்தி யுயிர்க ளெவைகண்ணு முளவென்னை வழிபட்டு ளானோ அவன்யோகி யெந்தெந்த விதமா யிருக்கின் றவனேனு மென்கண் ணிருக்கின்ற வன்காண். 26-4 ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/126&oldid=799670" இலிருந்து மீள்விக்கப்பட்டது