பக்கம்:கீதைப்பாட்டு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (ஏழாம் அத்தியாயம்) ஞான விஞ்ஞான யோகம் G. தை இயற்பொருள் விளக்க) ஏழெனிய வில்லிறைவ னேற்றமு மிதற்கு வீழ் பகடி யாலுள மறைப்பு மதுவீயத் தாழ்வி லிறையச் சரண் வரிப்பு மிறைபத்தர் சூழ்வகையு ஞானியி னுயர்தத்தியொடு சொல்லும், பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன் இவைகளை அறியவொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம். ஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத் தடையை நீக்க இயலாது. பக்தர்களில் துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர். ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தை யுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு. அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர். அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குகிறவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/132&oldid=799677" இலிருந்து மீள்விக்கப்பட்டது