பக்கம்:கீதைப்பாட்டு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான விஞ்ஞான யே ம் 135 யே சைவலாத்விகா-பாவா ராஜலாஸ்-தாமஸாச்ச யே மத்த ஏவேதி தான் வித்தி ந த் வஹம் தேஷ-தே மயி 12. சத்துவ குணத்த பொருள் யாவை கொலிராச சத்தபொருள் தாமத குணப்பொருள்கள் யாவை அத்தனையு மென்னிட னின்றே வருவ வென்றோர் அப்பொருள்க ளென்னுள வற்றுளிலை யானோ. 292 சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை. த்ரிபிர்-குணமயைர்-ப்பாவை-ரேபி: ஸ்ர்வமிதஞ் ஜகத் மோஹிதம் நாபிஜானாதி மாமேப்ப்ய: பர-மவ்யயம் 1. முக்குண வயத்தினுள வாம்பொருள்க ளானே மோகமுறு மிவ்வுலகம் யாவுமிவை யிற்றின் மிக்கவணு மெப்பொழுது மேயழிவி லாமை மேயவனு மாயவெனை யோவறித லில்லை. 293 இந்த மூன்று குணங்களாலாகிய எண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப்போய் இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது. தைவீ ஸ்யேவடிா குணமயி மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா-மேதாம் தரந்தி தே 14. தேவாமெ னாலுள்ள தாகிக் குனத்தாற் றிரளிதென் மாயை கடத்தற்கி லன்றோ ஏவர் சரண்புக்குளா ரென்னை யேதான் இம்மாயை யன்னோர் கடப்பார்க ளம்மா. 29.4 இந்தக் குணமயமாகிய எனது தேவமாயை கடத்தற்கரிது. என்னையே யாவர் சரணடைவரோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள். ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: மாயயாபஹ்ருத-ஜ்ஞானா ஆலமரம் பாவமாச்ரிதா: 15. மூடர் நராதமர் மாயை கவர்ந்து மூடறி வுள்ளவ ராசுரத் தன்மை கூடின ரென்றிவர் தீது செயன்மேற் கொள்ப ரென்னைச் சரண் புகலில்லை. E.T தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார். மாயையால் ஞா மழிந்தோர். அகரத் தன்மையைப்பற்றி நிற்போர். இனையோர் என்னை சரண் புகார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/136&oldid=799681" இலிருந்து மீள்விக்கப்பட்டது