பக்கம்:கீதைப்பாட்டு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான விஞ்ஞான யோகம் 137 காமைஸ்-தைஸ்தைர்-ஹ்ருதஜ்ஞானா ப்ரபத்யந் தேsன்யதேவதா: தம் தம் நியம-மாஸ்த்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா 20. தந்தம் பயதிக்கு வயப்படுகின் றனரவ்வவ் விருப்பி னுளங்கவர்வுற் றந்தந்த விதிப்படி நின்றுபுக லடைகின்றன ரந்நிய தேவரையே. 3OO வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர் தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். யோ யோ யாம் யாம் தனும் பக்த: ச்ரத்தயார்ச்சிது-மிச்சதி தஸ்ய தஸ்யாசலாம் ச்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் 21. எவ்வெவ் வுருவத் தினையன் புசெய்தெவ் வெவன்பூ சைசிரத்தையுடன் விழைவான் அவ்வன் னவனுக் கசையா தபடி யானல் குவலன் னசிரத் தையையே. 3O1 எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன். எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ. அவனவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன். ல தயா ச்ரத்த்யா யுக்தஸ்-தஸ்யாராதன-மீஹதே லபதே ச தத: காமான் மயைவ விஹறிதான் ஹி தான் 22. அப்படிக் குறுசிரத் தையினுடன் னவனியைந் தவனதா ராதனம் புரிவதிற் பிரியனாம் அப்படித் தொழுவதா லென்றனா லேதர லாயபல் லிதமுறுங் காமமும் மேவுமே. 3O2 அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ் வடிவத்தை ஆராதிக்க வேண்டுகிறான். அதினின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான். எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே. அந்தவத்து பலம் தேஷாம் தத்-பவத்-யல்பமேதலாம் தேவான் தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி 23. அறிவிற் சிறியா ரவருக் குறுபே றதுவோ வழிவுற் றிறும் வானவரைப் பெறவேட் பவர் வானவரைப் பெறுவார் பெறுவா ரெனையென் னுடையன் பருமே. 303 எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என் அடியார் என்னையே எய்துகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/138&oldid=799683" இலிருந்து மீள்விக்கப்பட்டது