பக்கம்:கீதைப்பாட்டு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கீதைப் பாட்டு பேராசிரியர் அவர்களை அணுகி அணிந்துரை கேட்ட போது தயக்கமின்றி ஒப்புக்கொண்டார்கள். தமது பல பணிகளுக்கு இடையிலும் நூலைக் கூர்ந்து. படித்து அருமையான ஓர் அணிந்துரையை வழங்கியுள்ளார்கள். இவ்வுரை. நூலுக்கு ஏற்புடைய ஓர் அறிமுக உரையாகும். கீதைப்பாட்டு நூலின் அமைப்பையும் மகாவித்துவானின். தாழிசைப் பாட்டுகளின் அமைப்பையும் போக்கையும் சிறப்புற எடுத்து விளக்கியுள்ளார்கள். பேராசிரியர் அவர்களுக்கு நானும் பதிப்பகத்தாரும் பெரிதும் நன்றிக் கடப்பாடு உடையோம். கீதைப்பாட்டு நூலைப் பதிப்பிட எடுத்துக் கொண்டு சீரிய முறையில் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்தாருக்கு மீண்டும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். -- மகாவித்துவான் ரா. இராகவையங்கார் கீதைப்பாட்டு தமிழ் உலகத்திற்குக் கிடைத்த அரிய கருவூலம். இந்நூலைத் தமிழன்பர்கள் பெற்றுப் பயன் கொள்வார்களாக! கவிமணி நிலையம் மு. சண்முகம் பிள்ளை 15-08-97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/14&oldid=799685" இலிருந்து மீள்விக்கப்பட்டது