பக்கம்:கீதைப்பாட்டு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (6TE-F அத்தியாயம்) அகூதர பிரஹ்ம யோகம் () இயற்பொருள் ఎr:) எட்டெனியல் செல்வ மழியா வுயிரியற்கை மட்டில்பர தேவனடி மன்ன விழைவார்க்கே ஒட்டுவனவும் மொழுகவுற் றனவு மாகுந் தட்டில் வகையானவையுந் தனிப்புகல்வ தம்மா. முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்றவேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்கையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனதுக்குள் இருக்கின்றதோ அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில் கடவுளைத் தியானித்திருப்பது அவசியம். வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம் மனம் மன்னகாலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்யவேண்டும். நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்றப் பலனெல்லாம் அழிவுந்தது. பக்தர்கள் இறந்த பிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பிவராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால் காலக்கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடைடிாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/141&oldid=799687" இலிருந்து மீள்விக்கப்பட்டது