பக்கம்:கீதைப்பாட்டு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அ ணிந்துரை) பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் தமிழ்த்துறைத் தலைவர். பச்சையப்பன் கல்லூரி - சென்னை -30 வான்மீகி ராமாயணமும் வியாச பாரதமும் பாரத நாட்டின் பழம்பெருஞ் செல்வங்கள். இவற்றுள். இராமாயணத்தில் 'ஆதித்ய ஹிருதயமும், பாரதத்தில் பகவத் கீதை'யும் இடம் பெற்றுள்ளன. இவ்விரு பகுதிகளையும் இன்றும் பலர் பாராயணம் செய்து வருகின்றனர். 'ஆதித்ய ஹிருதயம் சூரியனைப் போற்றிப் பரவுவது. ஆனால், 'பகவத்கீதை' ஆன்மீகக் கருத்துகளைத் தெளிவாகப் புகல்வது. ஆதித்ய ஹிருதயத்தினும்'. "பகவத்கீதை பெரிதும் போற்றிக் கொண்டாடப் படுகிறது. 'பாரதத்தினிடையே பொதிந்து வைக்கப்பட்டுள்ள விலை மதிப்பற்ற மாணிக்கம் கீதை' என்று மனிதர்குல மாணிக்கம் ஜவர்ஹர்லால் நேரு தம் மகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றுள் குறித்துள்ளார். = தத்துவ உலகத்திலும் கீதைக்குத் தனியிடம் உண்டு. கொள்கை விளக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த மூன்று நூல்களைப் "பிரஸ்தானத்திரயம்’ என்பர். உபநிடதங்கள்', 'பிரம்மசூத்திரம்'. 'பகவத்கீதை' ஆகிய மூன்றும் 'பிரஸ்தானத்திரயம் எனப்படும். தத்துவ ஆராய்ச்சியில் உபநிடதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது 'பிரம்ம குத்திரம். உபநிடதக் கருத்துகளை எல்லாம் தெளிவாக விளக்குவது பகவத்கீதை' உபநிடதங்களாகிய பசுவினிடமிருந்து பெற்ற இனிய பால் "கீதை' எனலாம். தத்துவ உலகில் மூன்று முதன்மையான கோட்பாடுகள் குறிக்கப்படுகின்றன. அவை, அத்வைதம்’, ‘விசிட்டாத்வைதம்’, ‘துவைதம்’ என்பன. இக்கோட்பாடுகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டன. இறைவன் ஒருவனே உள்ள பொருள் மற்ற அனைத்தும் அவன் நிழல் என்பது அத்வைதம். இக்கோட்பாட்டினை வற்புறுத்தியவர் ஆதி சங்கரர். இறைவன் ஈஸ்வரன் உயிர் (சித் உலகம் அசித் மூன்றும் உள்ள பொருள்கள். உயிரையும் உலகத்தையும் தனக்கு உடலாகக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/15&oldid=799696" இலிருந்து மீள்விக்கப்பட்டது