பக்கம்:கீதைப்பாட்டு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (ஒன்பதாம் அத்தியாய ம்) ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் (ణ இயற்பொருள் ിങ്s) ஒன்ப தெனியற் கணிறை யொண்மகிமை யோடும் மன்பதைமெய் யின்னி லையினும் முயர்பு மன்னல் நன்பரம ஞானியது மன்பெரிய மேன்மை இன்பமவிர் பத்தியெனும் யோகமொ டிசைக்கும். இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தியோகத்தில் இறங்குவோன் அதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். பின்வரும் கடவுள் பெருமைகளையும் நன்குணர வேண்டும்:- கடவுள் எங்கும் நிறைந்த பரம் பொருள். உலகமனைத்தும் அவரிடத்திலேயே நிலைபெற்று நிற்கிறது. கடவுளோ உலகத்தில் நிலைபெற்று நிற்பதில்லை. அவற்றின் பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தும் அவற்றின் முதற்கிழங்காகிய பிரகிருதியில் மறைகின்றன. சிருஷ்டி காலத்தில் கடவுள் அவைகளை பிரகிருதியினின்றும் வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு இறைவனும், இருப்பிடமும், சரனும், தோழனும் கடவுளே. பக்தர்கள் தங்கள் செயல்களைனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்படவேண்டும். கட்வுளிடத்திலேயே மனதைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/150&oldid=799697" இலிருந்து மீள்விக்கப்பட்டது