பக்கம்:கீதைப்பாட்டு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை 15 இறந்துக நூறித் தக்கோர் இடர்துடைத் தேக ஈண்டுப் பிறந்தனன் தன்பொற் பாதம் ஏத்துவார் பிறப்ப றுப்பான் (பிணிவீட்டுப்படலம்:81) என்று தமிழாக்கம் செய்துள்ளார். பெரும்புலவரும் கவிஞருமாகத் திகழ்ந்த பேராசிரியர் ரா. இராகவையங்கார் பகவத்கீதையினைத் தாழிசை யாப்பில் மொழி பெயர்த்துள்ளார். அவர் மறைந்து பல்லாண்டுகளுக்குப் பின் இப்பொழுது அது "கீதைப்பாட்டு’ என்னும் பெயரில் அச்சேறி, வெளிவருகிறது. "கீதைப்பாட்டு முதலில் பாயிரம் என்னும பகுதியையும் அதனைத் தொடர்ந்து பதினெட்டு அத்தியாயங்களையும் கொண்டு விளங்குகிறது. நூலாசிரியர், பாயிரத்தில், கலைமகள், கண்ணபிரான், வேதவியாசர். வைணவ ஆசாரியர்கள். தமக்குத் தமிழ் புகட்டிய ஆசிரியர். நல்வாழ்வு அளித்த திருவணை அதிபதி ஆகியோரைப் போற்றி அவையடக்கம் சொல்லி, தம் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிவித்து இறுதியில் கீதையின் நூற்பகுப்பினையும் பொருளினையும் வகுத்துரைத்துள்ளார். ஒவ்வோர் அத்தியாயத்தின் முதலிலும், கீதை இயற்பொருள் விளக்கம் என்னும் தலைப்பில் அவ்வத்தியாயத்தின் கருத்துச் சுருக்கமாகப் பாட்டு வடிவிலும் பின்பு உரைநடை வடிவிலும் தரப்பட்டுள்ளது. இது கற்பார்க்குப் பெருந்துணையாய் அமைகிறது. அடுத்து, கீதையின் சுலோகங்கள் தமிழில் தரப்பட்டு, அவற்றின் பின் செய்யுளில் அமைந்த தமிழாக்கமும் இறுதியில் உரைநடையில் சுலோகத்தின் பொருளும் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் ரா. இராகவையங்கிார் செழுந்தமிழில் கீதையினை மொழி பெயர்த்துள்ளார். அங்கங்கே சந்த இனிமை நிறைந்து கவிதை உயர்ந்து நிற்கிறது. "தீதுவினை சூழவரு போதுகுல மாதர் -- தீமைமிக மேவியவர் ஆவர்; உயர் கண்ண! யாதவ! நன் மாதர்மிக வேதம் உளர் ஆயின் எவ்வரு ன மும் கலவல் எய்துறும் அரோதான். (அர்ஜுன விஷாத யோகம் :41)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/17&oldid=799718" இலிருந்து மீள்விக்கப்பட்டது