பக்கம்:கீதைப்பாட்டு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கீதைப் பாட்டு "ஞான தவத்தினில் ஆகிய சுத்தியின் ராகப யத்தொடு கோபம் விடுத்தொரு வேனைஅ டுத்தெனை யேநினை வாயவர் எத்துணை யோர்என் இயற்கையை எய்தினர்' (ஞானயோகம்:10) போன்ற தாழிசைகள் ஒசைநயம் சிறந்து பயில்வார்க்கு இன்பம் நல்குகின்றன. பேராசிரியர் பெரும்பாலும் கட்டளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எனினும் அங்கங்கே எளிமை நலமும் காணப்படுகிறது. ‘என்கனேடிக உய்ப்பை நெஞ்சினை: என்கனே வைக்க உணர்ச்சியை, என்கனே நிலைசெய்; இதன்மிசை என்க னேஉளை, ஐயம் இல்." (பக்தியோகம்:8) "அவமானமும் மானமும்ஒர் படியாய் அற்றாருடன் உற்றவர்கண் சமமாய்த் தவஆள் வினையாவும் ஒழித்தஅவன் தான்தாயவன் என்பன் குணங்களையே! (குணத்ரயவியாகயோகம்:25) என்னும் தாழிசைகள் எளிமை அழகுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள். பேராசிரியரின் இருமொழிப் புலமை வடசொற்களுக்கு மிகப் பொருத்தமான சொற்களைக் கண்டு கவிதையில் பெய்யத் துணையாக அமைந்துள்ளது. கூடிமா, த்த்ருதி' என்பவற்றைப் (சுலோகம் 575 'பொறைக்கண்நிலை, திடம் என்று மொழிபெயர்த்துள்ளார். "சமம், தமம்’ என்பவற்றை சுலோகம் 666) முறையே "பொறியொடுங்குவது. மனன் அடங்குவது' என்றும் தமிழாக்கம் செய்துள்ளார். ஆர்த்தன், ஜிஜ்ஞாஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/18&oldid=799730" இலிருந்து மீள்விக்கப்பட்டது