பக்கம்:கீதைப்பாட்டு.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி யோகம் 199 இதுவும் நின்னால் செய்யக் கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக்கொண்டு. தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையுந் துறந்துவிடு. ச்ரேயோ ஹி-ஜ்ஞான-மப்ப்யாலாத் ஜ்ஞானத்-த்யானம் விசிஷ்யதே த்த்யானாத் கர்மபலத்யாகஸ்-த்யாகாச் சாந்தி-ரனந்தரம் 12. தினமும் பயிறலினும் மறிவதி மேன்மைய தறிவிற் றியானம் மிக மேலென்ப தியானத்தி னுளுற்றும் வினையின்பயன் விடுதன் முதன்மைத்தாம் விடுதலினால் விரவத்தகு மன்றோபிற கிதையத்துறு சாந்தி. 487 பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது தியானத்தைக் காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்து விடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது. அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச நிர்மமோ நிரஹங்கார: ஸ்மது: க்கலகை: கூடிமீ 13. எல்லாவுயிர் மீதும் வெறுப்பிலனட் பினனா யருளேயுளன் யானெனதென் றில்லாதவ னாகி நலத்திடையும் இடரின்கணு மொத்தியலும் பொறையோன். 482 எவ்வுயிரையும் பகைத்தலின்றி. அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய். யானென்பதும் எனதென்பதும் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய், லந்துவிட: ஸ்ததம் யோகி யதாத்மா த்ருடநிச்சய: மய்யர்ப்பித-மனோ-புத்திர்-யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: 14. இன்டொடெப் பொழுதும் யோகி னின்றுமன னியல்வறத் துணிபு திடமரீஇ என்கண் வைத்த மனமதியன் யாவனென தன்பனெற் கினிய னவனரோ, 483 எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சய முடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/200&oldid=799753" இலிருந்து மீள்விக்கப்பட்டது