பக்கம்:கீதைப்பாட்டு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கீதைப் பாட்டு எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல். உடம்பில் ஆத்மா எங்கணு மிருந்தாலும் பற்றுறுவதிலன். யதா ப்ரகாசயத்-யேக: க்ருத்ஸ்னம் லோக-மிமம் ரவி: கூேடித்ரம் கூேடித்ரீ ததா க்ருத்ஸ்னம் ப்ரகாசயதி பாரத 34. ஒரு சூரிய னெவ்விதமா யிவிவெலா வுலகும் மொளிசெய் குவ னவ்விதமே பரதன் மரபோ யுடல்கொள் ளுயிரோ படரும் மொளிதா னுடலெங் கனுமே. 523 சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுதையும் எங்ங்ணம் ஒளியுறச் செய்கிறானோ, அதுபோல் கூேடித்திரத்தை புலடயோன் கேஷ்த்திர முழுதையும் ஒளியுறச் செய்கிறான். கூேடித்ர-கூேடித்ரஜ்ஞயோ-ரேவ-மந்தரம் ஜ்ஞான சகூடி வடிா பூத-ப்ரக்ருதி-மோகூடிஞ் ச யேவிதுர்-யாந்தி தே பரம் 35. இவ்வா றுடலோ டுயிர் வேற்றுமையும் எப்பூதமுமாம் பகடிக் குளிருந் தவ்வீடுறு தன்மையு ஞானவிழி யாலோர் வரெவர் பரமார்வரவர் 524 ஞானக் கண்ணால் இவ்வாறு கூேடித்திரத்துக்கும் கூேஷத்திரக்ஞனுக்கு முள்ள வேற்றுமையை அறிவோர் பூத பிரகிருதியினின்றும் விடுதலை பெற்றுப் பரம்பொருளை அடைகின்றனர். பதின்மூன்றாம் அத்தியாயம் நிறைவேறியது. (கதைப்பொருட் GL 7) தன்னு னியல்புந் தனைத்தான் பெறுமாறும் பன்னான்ம சோதனையும் பந்தத்திற்-கின்னதுதான் எதுவெனத் தெளிவோ டேரான்ம ஞானமுமிங் கோதும் பதின்மூன் றொருங்கு. (17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/213&oldid=799767" இலிருந்து மீள்விக்கப்பட்டது