பக்கம்:கீதைப்பாட்டு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணத்ரய விபாக யோகம் 27 லர்வத்வாரேஷ தேஹேsஸ்மின் ப்ரகாச உபஜாயதே ஜ்ஞானம் யதா ததா வித்யாத் விவ்ருத்தம் ஸத்வமித்யுத ா. மேனி மற்றிதிற் பொறிகள் முற்றிலும் மெய்விளங்குதற் கெந்த வேளையில் ஞான முள்ளதா மந்த வேளையில் நன்கு சத்துவம் பொங்குமென்றறி. 535 இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்துவ குணம் வளர்ச்சி பெற்ற தென்றறியக் கடவாய். லோப: ப்ரல்ருத்தி-ராரம்ப்ப: கர்மனா-மசம: ஸ்ப்ருஹா ரஜஸ்-யேதானி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப 12. பரதரேறு லோபம் பயன்னில பண்ணல் கன்மவாரம்பம் வெம்பொறி கரைகடந்து போவது பல் பற்றிவை கலவுமே ரசோ குணன் வளர்ந்துழி. 535 அவா. முயற்சி. தொழி லெடுப்பு அமைதியின்மை, விருப்பம். இவை ரஜோ குணம் மிகுதிப் படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதர் காளையே அப்ரகாசோSப்ரவ்ருத்திச்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச தமஸ்-யேதானி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தன 13. பெருமயல் பிரமாத மொட்பமில் பெற்றியே முயலாமை மற்றிவை ஒருதமோ குணன் வளரு மவ்வுழி உளவரோ குரு மரபின் மைந்தனே. 53.7 ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்-இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குரு குலச் செல்வமே யதா லத்வே ப்ருவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத் ததோத்தமவிதாம் லோகா-னமலான் ப்ரதிபத்யதே 14. எந்தவேளை சத்துவம் வளர்ந்ததவி விடையுடம்புளான் மரண மெய்துமேல் முந்து முத்தமம் முனரு வோருள முழுது நிர்மல வுலக மேவுவான். 53.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/218&oldid=799772" இலிருந்து மீள்விக்கப்பட்டது