பக்கம்:கீதைப்பாட்டு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கீதைப் பாட்டு தமிழாராய்ச்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. தம் 65 ஆம் வயதில் அளிக்கப் பெற்ற பெரும் பொறுப்பை மிகச்சிறப்பாக ஆறு வருடங்கள் நிறைவேற்றினார். இக்காலத்தில் இவர் செய்த சொற்பொழிவுகளைக் கேட்டு மயங்கியவர்களில் டி.கே.சி. ராஜாஜி, சத்யமூர்த்தி, நீதிபதிகள். அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பலர். தமிழ் வரலாறு. பாரிகாதை, தித்தன் கோசர், பட்டினப்பாலை உரை. பெரும் பாணாற்றுப் படை ஆராய்ச்சி. அபிஜ்ஞான சாகுந்தலம் இந்த ஐந்தாண்டுகளில் வெளியானவை. 'குறுந்தொகை விளக்கம் என்னும் பேருரை இங்கு உருவாகியது. இவ்வாறு தென்னாட்டுத் தமிழ்த் திலகமாய் விளங்கிய புலவர் பெருமான் 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் நாள் தமது 77 ஆம் வயதில் தம் இராமநாதபுரத்து இல்லத்தில் காலமானார். பரிமேலழகரை "ஈசனதருளால் உய்த்து உணர்வுடையவோர் உண்மையா ளன்” என்பர். அத்தகைய “அநுக்ரகசத்தி” இம் மகாவித்துவானிடம் அமைந்திருந்தது. இப்புலவர் பெருமானின் மகன் வழிப் பேரன் நான். எனவே பிள்ளைப் பிராயம் தொடங்கும் பொழுதே இவரால் பேணி வளர்க்கப்பட்டவன். பல பெரும்புலவர்களும், அறிஞர்களும் இவருடன் உரையாடும் பொழுது அவர் மடியிலும், அருகிலும் அமர்ந்து தமிழ் இன்பம் நுகர்ந்தவன். வாழ்க்கைக்கு விஞ்ஞானத் துறையை நான் மேற்கொண்டாலும், தமிழ்ப் பற்றும், ஆராய்ச்சி முறையும் இளமையிலேயே அவரால் எனக்கு அளிக்கப்பட்ட பெரும் பரிசுகள். என்னை நிலைக்களனாக வைத்து அவர் பாடிய பாடல் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. "சங்குச் சக்கரச் சாமி வந்து சிங்கு சிங்கென ஆடுமாம்! அது சிங்கு சிங்கென ஆடுமாம்! உலகம் மூன்றும் அளக்குமாம்-அது ஓங்கி வானம் பிளக்குமாம்: கலகல எனச் சிரிக்குமாம்-அது காணக்கான இனிக்குமாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/22&oldid=799774" இலிருந்து மீள்விக்கப்பட்டது