பக்கம்:கீதைப்பாட்டு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணத்ரய விபாக யோகம் 219 சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர். நான்யங் குணேப்ப்ய: கர்த்தாரம் யதா த்ரஷ்டானுபச்யதி குணேப்ப்யச்ச பரம் வேத்தி மத்ப்பாவம் லோSதிகச்சதி 19. உணரவல சீவன் குனனைவிட வேறாய் ஒருதலைமை யெந்தப் பொழுதுணர கில்லான் குனனைவிட வேறா யுளதனை யுணர்ந்தான் குலவுவனரோ வென்னியல்பை யவனம்மா. 543 குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான். குணானேதா-னதித்ய த்ரீன் தேஹீ தேஹ-லமுத்ப்பவான் ஜன்ம-ம்ருத்யு-ஜரா-து:க்யைர்-விமுக்தோsம்ருத-மச்னுதே 20. தேகமுள சீவனுடலிற் செனன மாகுந் திரிகுன மிவற்றை யொருவிப் பிறவிசாவோ டாகுறு கிழத்தன மிவற்றின் விளை துன்பம் அறவிடுதல் பெற்றமுத முறவது பவிப்பன். 544 உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையுங் கடந்து பிறப்பு. சாவு மூப்பு வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த் நிலையடைகிறான். அர்ஜுன உவாச : கைர்-லிங்கைஸ்-த்ரின் குனா-னேதா-னதீதோ பவதி ப்ரபோ கிமாசார:கதஞ்-சைதான்ஸ்-த்ரீன் குனா-னதிவர்த்ததே 2. இவைமூன்று குனங்கள் கடந்தவனுக்கு கேதோ வடையாள மெதோ வொழுகா றிவைமுன்று குணங்கள் கடந்ததுதா னெவ்வாறு கொலம்ம எலாமுதல்வோய். 5.45 அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே. மூன்று குணங்களையுங் கடந்தோன் என்ன அடையாளங்களுடையவன்? எங்ங்னம் ஒழுகுவான்? இந்த மூன்று குனங்களையும் அவன் எங்ங்னம் கடக்கிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/220&oldid=799775" இலிருந்து மீள்விக்கப்பட்டது