பக்கம்:கீதைப்பாட்டு.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு பதினைந்தாம் அத்தியாயம் ( ) புருஷோத்தம யோகம் (s தை இயற்பொருள் aaa3) மூவைத் தில்சித் தராரு யிருக்கும் மலமற்ற சீவன் கடமக்கும் முயர்புரு டோத்தம னெங்கும் மேவுந் திறனா லேந்தும் விதத்தா லுடையானாம் தாவில் லியல்பால் வேறெனல் சாற்றும் மதிகொளவே. பிரகிருதி ஆத்மா-இவ்விரண்டையும் தன் வசப்படுத்திக்கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவியிருப்பதுபோல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம். இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவமனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது. இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடாரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண் வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டு வித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/223&oldid=799778" இலிருந்து மீள்விக்கப்பட்டது