பக்கம்:கீதைப்பாட்டு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் அறிமுகம் 2] கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது கூத்தும் ஆடப்பண்ணுமாம்: எட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு எந்த வரமும் அளிக்குமாம்! யாரும் காண அரியதாம்-அது யாரும் காண எளியதாம்; பேரும் ஊரும் உள்ளதாம்-அது பெரிய பெருமை கொண்டாம்! ஆதிமூலம் என்று சொன்ன யானை முன்பு வந்ததாம்! ஜோதி ரூபம் ஆனதாம்; அது தூய வீடு தருவதாம்! (சங்குச்.) இப்பாட்டுக்குக் காலில் வெள்ளிக் கொலுசுடன் அவர் கைபிடித்து ஆடிய பேறு பெற்றவன் நான். சங்கச் செய்யுளில் குறிக்கப்பெறும் வஞ்சிமாநகர் பற்றிய சர்ச்சை பலகாலம் நடந்தது. கொங்கு நாட்டுக் கருவூரே வஞ்சி என்று அவர் நிலை நிறுத்தி அவர் வாதம் செய்யும் பொழுதே நான் இளநிலைப்பள்ளி மாணவன். உண்மையை நிலை நிறுத்துவதில் இறைவனோடு வாதம் புரிந்த நக்கீரனை அவர் எனக்கு நினைவில் நிறுத்தினார். இன்று அகழ்வாராய்ச்சிக்காரர்கள் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொண்டுள்ளனர். வளரும் பருவத்தில் என் உறவினர் மூலம் அவர் செய்த சொற்பொழிவுகளின் ஒரு சில துளிகள் என் மனத்தில் பசுமையாய் அமைந்துள்ளன. நகைச்சுவை ததும்பப் பேசுவதிலும். அங்கதம் (Satre) முறையைக் கையாளுவதிலும் அவருக்கு நிகர் யாருமில்லை. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு ஆண்டு தோறும் சென்று சொற்பொழிவாற்றுவார். கூட்டம் கலையும் போல் இருந்தால் சாதுரியமாக தஞ்சை சரசுவதி மகாலில் கண்ட தனிப் பாடல்களை எடுத்து விளக்கி யாவரையும் மயக்கி விடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/23&oldid=799785" இலிருந்து மீள்விக்கப்பட்டது