பக்கம்:கீதைப்பாட்டு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கீதைப் பாட்டு "பிரம்பைக் கரம்பற்றிப் பின்னிஅந்தக் கூடை நிரம்பக் கவியை நிரப்பி - சிரம்பற்றிக் கற்றார்கள் வாழும்தஞ் சைக்கடை யெலாம் கூவி விற்றாலும் கொள்ளார் விலைக்கு” என்று தஞ்சைவாசிகள் தமிழ் அறிவு இல்லாதவர்கள் என்பது போல இது அமைந்தாலும், உண்மையில் கொல்லன் உலையில் ஊசி விற்பது போல், கவிகள் நிரம்பிய தஞ்சை வாசிகள் மத்தியில் எந்தக் கவியும் விலை போகாது என்று கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மங்கல மங்கையராய் மன்னவர் கன்னியராய் மைந்தர் வயிற்றினராய் வாழ்வின ராயதிலே திங்கள் நிறைந்துவரும் சேயிழையார் நடைபோல் தென்றல் அசைந்துவரும் செந்தமிழ் நாடுடையாய் (சரசுவதிமகால் படிப்பகம்) என்ற அருமையான பாடலின் முதல் இரண்டடியைக் கூறி "வாழ்வினராயதிலே” என்பதற்கு அழகான விளக்கம் கூறினார். வீரர்கள் யுத்தத்தின் பொருட்டு வெளிநாடு செல்லாமல் மனைவிமார் கணவரை விட்டுப் பிரியாமல் இருவரும் ஒருங்கே சேர்ந்து வாழ்வதைக் குறிப்பிடுகிறார் கவி. இதற்கு எதிர்ப்பதம் வாழாவெட்டி என்று நயத்தை விளக்கினார். இது போல் பல துணுக்குள் என் மனத்தில் பசுமையாய் உள்ளன. “நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த ராமாவதாரப் பேர்த் தொடை நிகழ்ந்த தோமறு மாக்கதை" - கம்பராமாயணம். என்ற பாடலில் இரு அரிய செய்திகள் உள்ளன. பரசுராம. இராம. பலராம என்ற மூன்று ராம அவதாரங்களில் இடையில் உள்ளது இராமாவதாரம். கம்பன் தன் காவியத்துக்கு இட்ட பெயர் இராமாவதாரம். இது போன்றே தம் வட மொழிப் புலமையால், சாகுந்தலம். வால்மீகி இராமாயணம், காளிதாசன் காவியங்கள். மகாபாரதம், பாகவதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/24&oldid=799799" இலிருந்து மீள்விக்கப்பட்டது